1.6.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
*திமுக பொதுக்குழு மதுரையில் இன்று நடை பெறும் நிலையில், நேற்று மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரமாண்ட ரோடு ஷோ நடத்தினார். 25 கி.மீ. தூரத்துக்கு மக்கள் திரண்டு நின்று வரவேற்பு, வழிநெடுக மக்களை சந்தித்து மனுக்களை பெற்றார்
தி இந்து:
*மோசமான’ இந்தியா-பாகிஸ்தான் மோதலை நிறுத்தியதாக டிரம்ப் மீண்டும் கூறுகிறார். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடை யிலான “தோட்டாக்கள்” அல்லாமல் வர்த்தகம் மூலம் “சாத்தியமான அணுசக்தி போரை நிறுத்த முடிந்தது” என்பதில் தான் மிகவும் பெருமைப்படுவதாக டிரம்ப் மீண்டும் கூறியுள்ளார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியா போர் விமானங்களை இழந்ததை ஒன்றிய அரசு முதல் முறையாக ஒப்புக் கொண்டதை தொடர்ந்து நாட்டை தவறாக வழிநடத்திய மோடி அரசாங்கம், கேள்விகளை எதிர்கொள்ள சிறப்பு அவைக் கூட்டத்தை நடத்த வேண்டும்: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தல்.தளபதி அனில் சவுகான் ஒப்புதல்.
– குடந்தை கருணா