காபூல், ஜூன் 26 ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். அதுமுதல் அங்கு பெண்களின் சுதந்திரம் பாதிக்கப்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதற்கிடையே கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொதுவாழ்க்கையில் ஈடுபட அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இந்த நிலையில் அந்த நாட்டின் உச்ச தலைவர் ஹிபதுல்லா அகுந்த்சாதா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, ‘தலீபான்கள் ஆட்சியில் கட்டாயத் திருமணம் உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளில் இருந்து பெண்கள் காப்பாற்றப்பட்டு உள்ளனர். மேலும் அவர்கள் வசதியான மற்றும் வளமான வாழ்க்கையை பெற தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன’ என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.