சிதம்பரம் நடராசன் கோவிலில் பக்தர்கள் கனகசபை மேடையில் நின்று நடராஜனை தரிசிக்கக் கூடாது என்று கோவில் தீட்சதர்கள் அடம்பிடித்தனர். மேடையில் ஏறக்கூடாது என்று அறிவிப்புப் பலகை யையும் வைத்திருந்தனர்.
இதுகுறித்து பக்தர்கள் புகார் செய்ய, இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் தலையிட்டும், தீட்சதப் பார்ப்பனர்கள் கோரத் தாண்டவம் ஆடினர்.
இதுகுறித்து அறநிலையத் துறை அதிகாரிகள் காவல் துறையில் புகார் கொடுத்தனர்.