கடல் நீர் நிலத்தடியில் புகுவதைத் தடுக்க கொசஸ்தலை, ஆரணி ஆறுகளை இணைக்கும் புதிய திட்டம்

2 Min Read

சென்னை, ஜூன் 26 – வடகிழக்கு பருவமழை காலங்களில் சென்னையில் பெரும்பாலான பகுதி கள் வெள்ளத்தில் மிதக்கிறது. கடந்த 2015ஆ-ம் ஆண்டு ஒரே நாளில் பெய்த அதிக கன மழை யால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து அதிக அளவில் வெள்ளம் திறந்து விடப்பட்டது. மழைநீரும், ஏரியில் இருந்து திறந்து விடப்பட்ட நீரும் சேர்ந்து சென்னையில் பல இடங் களில் வீடுகளை மூழ் கடித்தது. அதன் பிறகு கடந்த 2021ஆ-ம் ஆண்டு பெய்த கன மழையாலும் சென்னை வெள் ளக் காடானது.

வெள்ளத்தால் ஏற்படும் பாதிப் புகளை தடுக்க பல்வேறு நடவடிக் கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதி யாக சென்னையில் ஆறுகளின் கரையோரம் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப் பட்டு அங் கிருந்தவர்கள் வெளி யேற்றப் பட்டு வருகின்றனர். ஆனா லும் தனித் தனியாக எடுக்கப்படும் நடவடிக்கைகளால் சென்னை யில் வெள்ளப் பாதிப்பை தடுக்க முடி யாது.

எனவே சென்னையில் வெள் ளத்தால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க என்னென்ன நட வடிக் கைகளை மேற்கொள்ள வேண் டும் என்று அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக சென் னையில் வெள்ளப் பாதிப்பை தடுக்க திருவள்ளூர், செங்கல் பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள ஆறுகளை இணைக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

அதன்படி முதல் கட்டமாக கொசஸ்தலை ஆறு மற்றும் ஆரணி ஆறுகளை இணைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த 2 ஆறுகளையும் இணைக் கும் வகையில் விரைவில் ஆய்வு நடத்த நீர்வளத்துறை நடவ டிக்கை எடுத்துள்ளது. கொசஸ்தலை மற்றும் ஆரணி ஆறுகளை இணைப்பதற்கான தொழில் நுட்ப சாத்தியக் கூறுகளும் பரி சீலிக்கப்பட்டு வருகிறது. வட சென்னை பகுதியில் கடல்நீர் முகத்துவாரத்தின் வழியே ஆறு களில் புகுவதை தடுக்க இந்த நதிகள் இணைப்பு தேவைப் படுகிறது.

திருவள்ளூர் மாவட்டம் வட மதுரை, தாமரை பாக்கம் சாலை அருகே கொசஸ்தலை ஆற்றில் தடுப்பணை உள்ளது. இங்கி ருந்து உபரி நீரை வெளியேற்ற இணைப்புப் கால்வாய் அமைக்கப் பட்டு வரு கிறது. காரனோடை புதுவயல் சாலை அல்லது வெங்கல், பஞ்செட்டி அருகே உள்ள ஆறுகளை இணைக்கும் வகையில் கால்வாய் அமைக்க பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. இது நிலத்தடிநீரை அதிகரிக்கும். பஞ்செட்டி வரை கடல்நீர் கிட் டத்தட்ட 15 கி.மீ வரை உள்ளே புகுந்துள்ளது. இதனால் நிலத் தடி நீர் மட்டம் வறண்ட நிலை யில் காணப்படு கிறது. ஆறுகளை இணைப்பதன் மூலம் 2030ஆ-ம் ஆண்டுக்குள் கடல்நீர் உட் புகுவதை குறைக்க முடியும். 

ஆறுகள் இணையும் இடங் களில் இணைப்பு கால்வாயு டன் அணைகள் கட்டப்பட்டு வெள் ளப் பெருக்கை கட்டுப்பாட்டில் வைக்க முடியும். நிலத்தடி நீர் மட்டத்தையும் உயர்த்த முடியும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *