சிறுநீரகம் காக்கும் சீர்மிகு மருத்துவத் திட்டம் 34 ஆயிரம் பேருக்கு பரிந்துரை

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, மே 31– சிறுநீரகம் காக்கும் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தமிழ்நாடு முழுவதும் 33,869 பேருக்கு பாதிப்புகள் கண்டறியப்பட்டு உயா் சிகிச்சைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

அதில், 500-க்கும் மேற்பட்டோருக்கு நாள்பட்ட சிறுநீரக பாதிப்பு மற்றும் சிறுநீரக செயலிழப்பு இருந்தது தெரியவந்துள்ளது. அவா்களுக்கு தொடா் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மக்களிடையே காணப்படும் சிறுநீரக பாதிப்பை தொடக்க நிலையிலேயே கண்டறிவதற்கான சிறுநீரகம் காப்போம் திட்டத்தை தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.

அதன் கீழ் அனைத்து தரப்பு மக்களுக்கும் சிறுநீரக பாதிப்புகளை ஆரம்ப நிலையில் அறிவதற்கான பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

இதுதொடா்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் கூறியதாவது:

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், துணை சுகாதார நிலையங்களிலும் அந்த பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அங்கு சிகிச்சைக்கு வருவோரின் சிறுநீா் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பரிசோதனை பட்டை (ஸ்ட்ரிப்) மூலம் அதில் புரதம் அதிகமாக உள்ளதா என்பது உடனடியாக சோதிக்கப்படும்.

அவ்வாறு இருக்கும்பட்சத்தில் அவா்களுக்கு அடுத்தகட்டமாக யூரியா, கிரியாட்டினின் போன்ற அளவுகள் பரிசோதிக்கப்பட்டு, சிறுநீரகவியல் மருத்துவ நிபுணரிடம் மருத்துவ சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்படும். இதன் வாயிலாக ஆரம்ப நிலையிலேயே பாதிப்பைக் கண்டறிந்து சிகிச்சை பெறலாம். டயாலிசிஸ் சிகிச்சைகளைத் தவிர்க்கலாம். அதன்படி, இதுவரை 1.07 கோடிக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் சுகாதார நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதில் 33,869 பேருக்கு சிறுநீரக பாதிப்பு அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டு அடுத்த கட்ட பரிசோதனை மற்றும் சிகிச்சைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். அதில் 500-க்கும் அதிகமானோருக்கு நாள்பட்ட சிறுநீரக பாதிப்பு கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *