திருவள்ளுர், ஜூன் 26 – திருவள்ளூரில் 4.6.2023 அன்று மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் கி.கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங் கினார். பொதட்டூர் புவியரசன் தொடக்க உரையாற்றினார். கூட்டத்தின் நோக் கங்கள் குறித்து தலைமை கழக அமைப் பாளர் வி. பன்னீர் செல்வம் உரை யாற்றினார். ப.க மாவட்ட தலைவர் கி. எழில் மற்றும் தோழர்களும் கலந்துக் கொண்டு கருத்துகளை பதிவு செய்தனர். இறுதியில் மாவட்ட செயலாளர் ந. ரமேஷ் நன்றியுரையாற்றினார்.
கலந்துரையாடலில் வைக்கம் நூற் றாண்டு விழா குறித்து மாவட்டம் முழு வதும் தெருமுனை பிரசாரக் கூட்டம் நடத்துதல், மாவட்டம் முழுவதும் கழக அமைப்புகளை உருவாக்குதல், நமது மாவட்டத்தில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நடத்துதல், விடுதலை சந்தா சேர்த்தல் ஆகிய தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.