தெற்குநத்தத்தில் பெரியார் சிலை – தனிப் பயிற்சி மய்யம் திறப்பு விழா

Viduthalai
2 Min Read

தெற்குநத்தம், மே 30– ஒரத்தநாடு வடக்கு ஒன்றியம் தெற்கு நத்தத்தில் பெரியார்சிலை மற்றும் ஆசிரியர் சண்முகம் சரோஜா நினைவு பெரியார்படிப்பகம், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி நூலகம் பெரியார் தனிப் பயிற்சி மய்யம் திறப்பு விழா ஜூன்-6 ஏற்பாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திறப்பு விழா நிகழ்ச்சியில் தமிழர் தலைவர்  ஆசிரியர் கி.வீரமணி அவர்களும் உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் அவர்களும் மற்றும் நாடாளுமன்ற சட்டமன்ற இன்னாள் முன்னாள் உறுப்பினர்கள் அனைத்து கட்சி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர் அதற்கான ஏற்பாட்டுப் பணிகள் அமைப்பு பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.

தஞ்சாவூர் மற்றும் உரத்தநாடு ஒன்றியப் பகுதிகளில் மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், தஞ்சை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், தஞ்சை மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் அ.அருணகிரி, மாநில கலைத்துறை செயலாளர் ச.சித்தார்த்தன், ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய தலைவர் இரா.துரைராசு, வடக்கு ஒன்றிய செயலாளர் அ.சுப்பிரமணியன், வடக்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் சு.குமரவேல், மாநில வீதி நாடக குழு அமைப்பாளர் பி.பெரியார்நேசன், மாவட்டத் துணைத் தலைவர் பா. நரேந்திரன், தஞ்சை மாநகர செயலாளர் இரா.வீரகுமார், மாவட்டத் துணைச் செயலாளர் ரெ. சுப்பிரமணியன், உரத்தநாடு நகரத் தலைவர் பேபி.ரெ.ரவிச்சந்திரன் ஆகியோர் நிகழ்ச்சி அழைப்பிதழ்களை உயர் கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன், மேனால் ஒன்றி அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம்,திமுக தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகரன், எம் எல் ஏ தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி, தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி நீலமேகம், மேனாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.ராமச்சந்திரன் கே. டி மகேஷ்கிருஷ்ணசாமி, எஸ். எஸ்.ராஜ்குமார், தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம்பூபதி, உரத்தநாடு சட்டமன்றத் உறுப்பினர், மேனாள் அமைச்சர் வைத்தியலிங்கம், திமுக பொதுக்குழு உறுப்பினர்  திராவிட.கதிரவன், தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் முருகையன், திமுக ஒரத்தநாடு மேற்கு ஒன்றிய செயலாளர்  செல்ல. ரமேஷ்குமார், திமுக ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய செயலாளர் கு.செல்வராசு, திமுக ஒரத்தநாடு கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெ.கார்த்திகேயன், திருமங்கலக்கோட்டை  செந்தில்குமார்,மாவட்ட குழு உறுப்பினர்  சுபாஆனந்தன், பாப்பாநாடு வர்த்தக சங்க தலைவர்  சந்திரசேகர், வழக்குரைஞர் ஊரட்சி  திருப்பதி, மருத்துவர் செல்வராசு உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, மன்னார்குடி, கும்பகோணம், மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் ஆகியோருக்கு நேரில் சென்று விழா அழைப்பிதழ்களை வழங்கி விழாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது மகிழ்வுடன் பெற்றுக் கொண்ட அனைவரும் நன்கொடை வழங்கி சிறப்பித்தனர்.விழாவிற்கான விளம்பரப் பணிகள் உட்பட அனைத்து பணிகளும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *