‘குடிஅரசு’ நூற்றாண்டு விழா கொண்டாட்டம்-கண்காட்சி!

Viduthalai
1 Min Read

குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் நூறு ஆண்டுகளுக்கு முந்தைய திராவிடர் இயக்க இதழ்களை கண்டும், தொட்டும் பார்க்க ஓர் அரிய வாய்ப்பு!

திராவிடர் இயக்க வரலாற்றில் பச்சை அட்டைக் ”குடிஅரசு” செய்த சாதனைகள் அளப்பரியது. 20 ஆம் நூற்றாண்டில் 2.5.1925 அன்று தொடங்கப்பட்ட இவ்விதழ் தமிழ்ச் சமூக, அரசியல் வரலாற்றை தலைகீழாக மாற்றி அமைத்த பெருமைக்குரியது. இது இன்றைய இளைய தலைமுறை அவசியம் அறிந்துகொள்ள வேண்டிய அரிய உண்மை! இன்றைக் கிருக்கும் ’திராவிட மாடல்’ அரசுக்கு ’சுயமரியாதை இயக்கம்’ எப்படி அடித்தளமோ, அந்த சுயமரியாதை இயக்கத்திற்கே அடித்தளமாகவும், ஆயுதமாகவும் இருந்தது ”குடிஅரசு” இதழாகும்.

இதில் சுயமரியாதை, பகுத்தறிவு, கடவுள் மறுப்பு, தமிழர் நிலை, சமூகநீது, தமிழ்மொழி உணர்வு பற்றிய ஏராளமான கட்டுரைகள் வெளிவந்து தமிழர்க்கு அறிவூட்டின, உணர்வூட்டின. எழுச்சியூட்டின!

அதற்குத்தான் நூற்றாண்டு நிறைவு விழா கொண்டாடப்படுகிறது.

–  இக்கண்காட்சியில் தமிழ், ஆங்கிலம், திராவிட இயக்க நாளேடுகள், வார, மாத   இதழ்கள், அரிய புத்தகங்கள்

–  அன்றைய முக்கிய எழுத்தாளர்கள் பற்றிய விவரங்கள்

–  பெரியார் அருங்காட்சியகம், பெரியார் நினைவிடம் பார்வையிடல்

–  பெரியாரின் கையெழுத்துப் பிரதிகள் பார்வையிடல்

–  தன்மி புள்ளி (Selfie Point)

அனுமதி இலவசம்!

இடம்: பெரியார் பகுத்தறிவு
எணினி நூலகம் – ஆய்வு மய்யம்
பெரியார் திடல், சென்னை.
நாள்: 01.06.2025 ஞாயிற்றுக்கிழமை,
காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரைகொண்டாட்டம்-கண்காட்சி

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *