திருப்பம் தந்த திராவிட ‘மே’- த.சீ. இளந்திரையன்

viduthalai
9 Min Read

மே – 1 : உலக உழைப்பாளர் நாள்:

உலக தொழிலாளர்களே! ஒன்று சேருங்கள்! உங்களிடம் இழப்பதற்கு ஒன்றுமில்லை, அடிமைச் சங்கிலியைத் தவிர! ஆனால், அடைவதற்கோ பொன்னுலகம் காத்திருக்கிறது” என்றார் மாமேதை காரல்மார்க்ஸ். மே மாதம் என்றால் நம் நினைவுக்கு வருவது மே நாள் தான். மே 1 எப்படி உலக அளவில் இன்றியமையாத நாளோ. அதே போலவே மே மாதம் முழுவதும் திராவிட இனத்தின் மேன்மைக்கு- திராவிடர் வாழ்வுக்கு, திராவிடர் இயக்கம் போராடியும் –  திராவிட அரசு சட்டம் இயற்றியும் பல சாதனை சரித்திரங்களை நிகழ்த்தியிருக்கிறது. சுயமரியாதை இயக்க நூற்றாண்டை கொண்டாட காரணமாக இருக்கும் நிகழ்வுகள் பலவும் மே திங்களிலேயே நடைபெற்றிருக்கிறது.இத்தகைய சிறப்புமிக்க மே திங்களை திராவிட மே என்றே அழைக்கலாம்.

Contents
மே – 1 : உலக உழைப்பாளர் நாள்:மே – 1 பகுத்தறிவு திங்கள் இதழ் தொடக்கம் 1935:மே – 2 , 1925 குடிஅரசு வார இதழ் தொடக்கம் (குடிஅரசு நூற்றாண்டு)மே – 3: ஜாதி ஒழிப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறையேகிய  காரைக் கோட்டை இராமய்யன் விடுதலையாகி 1958 ஆம் ஆண்டு மரணமடைந்த நாள்.மே –8: 1948 தூத்துக்குடி திராவிடர் கழகம் மாநாடுமே – 9: 1930 ஈரோட்டில் இரண்டாவது மாகாண சுயமரியாதை மாநாடு நடைபெற்றது .(முதல் நாள்)மே – 10:  பிரிட்டிஷ் இந்தியாவில் பெண்கள் வாக்களிக்க கூடாது என்று இருந்த தடையை  1921 ஆம் ஆண்டு  பானகல் அரசர்  அரசு நீக்கியது. நீதிக்கட்சி அரசு அரசு ஆணை எண் 108 சட்டம் மூலம் இந்திய துணைக்கண்டத்திலேயே முதலாவதாக பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிய வரலாற்றுச் சிறப்பு நாள்.மே – 11: இயக்கத் தொண்டர்களுக்குத் தாயாகவும், போர்க்களத்தில் அறிவாசான் பெரியாரின் தளகர்த்தராகவும் விளங்கிய அன்னை நாகம்மையார் 1933 ஆம் மறைவுற்றார். அன்னை நாகம்மையார் மறைவுக்கு பெரியாரின் இரங்கல் அறிக்கை காவியத்தன்மை வாய்ந்தது.மே – 12: 1933 திருச்சியில் கிருத்துவ திருமணத்தை தடையை மீறி நடத்தி வைத்ததற்காக தந்தை பெரியார் கைது செய்யப்பட்டார்.மே – 13: 1985-  ஈழத் தமிழர்களின் இன்னல்களை உலக நாடுகளுக்கு கொண்டு செல்லும் நோக்கில் தமிழ் ஈழ ஆதரவாளர் அமைப்பு தொடங்கப்பட்டது.மே – 14: 1958 கோவில் தேவராயன் பேட்டை நடேசன் ஜாதி ஒழிப்பு போராட்டத்தில் இறப்பு.மே – 15: சட்டக் கல்லூரி மாணவராக பயின்று வந்த ஆசிரியர் கி.வீரமணி,.மே – 16:  1884 சென்னை மகாஜன சபை தோற்றம்.மே – 17: 1873 திருப்பாதிரிப்புலியூரில் ஞானியார் அடிகள் பிறந்த நாள் .மே – 19: திராவிட மாணவர் கழகம் பிறக்க காரணமாய் இருந்த எஸ்.தவமணிராசன் 2001 ஆம் ஆண்டு மறைந்த நாள்.மே – 20: 1845 – அயோத்திதாச பண்டிதர் பிறந்தநாள்மே – 21: அறிவியக்க ஆசான் பெரியாரும், அவர்தம் தலைமாணாக்கன் அண்ணா 1934 திருப்பூரில் நடைபெற்ற செங்குந்தர் 21 ஆவது வாலிபர் மாநாட்டில் சந்தித்து பேசினர். திராவிடர் வாழ்வு மறுமலர்ச்சியடைய காரணமாக இருந்த பொன்னாள்.மே – 22: இந்தியாவில் நடைபெற்ற முதல் மனித உரிமைப் போரான  வைக்கம் போராட்டத்தில் 1928 ஆம் ஆண்டு தந்தை பெரியார் முதல் முறையாக கைது செய்யப்பட்டு, சிறைக்கொட்டடியில் அடைக்கப்பட்டார்.மே – 23: 1958 திருவையாறு மஜித் ஜாதி ஒழிப்பு போராட்டத்தில் மறைவு .மே – 24: 1958 இடையாற்று மங்கலம் நாகமுத்து ஜாதி ஒழிப்பு போரில் ஈடுபட்டு முடிவெய்தினார்.மே – 25: 1866 மூ.சி. பூரணலிங்கம் பிள்ளை பிறந்த நாள்.மே – 26: 1967 முனைவர் மா.ராசமாணிக்கனார் மறைந்த நாள்.மே – 28: ஜாதியை நிர்மூலமாக்கும் வேலைத் திட்டங்களில் ஒன்றாக சுயமரியாதை திருமண முறையை தந்தை பெரியார் அறிமுகப்படுத்தினார். கைம்பெண் மணம், மறுமணம், காதல் மணம், பார்ப்பனர் தவிர்த்த மணமுறை உள்ளிட்டவை அடங்கும்.மே – 30: 1958 ஜாதி ஒழிப்பு போரில் சிறைச்சென்ற பொறையார் தங்கவேல் மறைந்தார்.

மே – 1 பகுத்தறிவு திங்கள் இதழ் தொடக்கம் 1935:

அறிவை வளர்க்கும் ஓர் சிறந்த மாத வெளியீடு’ என்ற முழக்கத்துடன் பகுத்தறிவு   இதழ் மே 1, 1935 ஆம் ஆண்டு பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகத்தின் சார்பில், திங்கள் இதழாக வெளிவந்தது. “‘பகுத்தறிவு’ தமிழ் மக்களிடையே அறிவியல் கொள்கைகளை அதி தீவிரமாகப் பரப்ப முயற்சி செய்யும்; விஞ்ஞான மேம்பாட்டை விளக்கமாக எடுத்துக்காட்டும்; மேனாட்டு மெஞ்ஞானப் புலவர்கள் கண்ட அரியபெரிய அற்புதங்களை யெல்லாம் தெள்ளிதில் விளக்கும்; மூட நம்பிக்கைகளையும் குருட்டுப்பழக்க வழக்கங்களையும், புரோகிதப் பித்தலாட்டங்களையும், ஜாதி சமய சாத்திரப் புரட்டுகளையும் புட்டுப் புட்டுக்காட்டும். சுருங்கக்கூறின் அறிவுக்கு மாறுபட்ட அனைத்தையும் நிர்த்தூளி பண்ணி யாண்டும் அறிவின் ஜோதி ஜொலிக்கத் தன்னாலான எல்லாத்தொண்டினையும் செய்து தமிழ் மக்களின் வாழ்க்கையை இன்பகரமாகச் செய்வதையே தனது கடமைகளாகக் கொண்டு வேலை செய்ய முனைந்து பகுத்தறிவு இன்று உங்கள் முன் வந்துளது.” என்று தந்தை பெரியார் தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

பெரியார் திரைப்படம் – 2007: அறிவாசான் தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை பறைசாற்றும் பெரியார் திரைக்காவியம் வெளியாகி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

மே – 2 , 1925 குடிஅரசு வார இதழ் தொடக்கம் (குடிஅரசு நூற்றாண்டு)

ஆரிய பார்ப்பனிய ஆதிக்கத்தை அழித்தொழித்த அறிவாயுதமாம் குடி அரசு வார இதழ் நூற்றண்டை நிறைவு செய்திருக்கிறது. கடலூர் தமிழ்த்திரு ஞானியார் அடிகளை கொண்டு தொடங்கப்பட்ட குடிஅரசு இதழ் பல்வேறு அடக்குமுறைகளைக் கடந்து,

அனைத்துயிரும் ஒன்றெண்ணும்

அதன் கொள்கையாக கீழ்க்கண்டவற்றை பிரகடனப் படுத்தியது:-

“மக்களுக்குள் சுயமரியாதையும் சமத்துவமும், சகோதரத்துவமும் ஓங்கி வளர்தல் வேண்டும்…”

“உயர்வு தாழ்வு என்கின்ற உணர்ச்சி ஒழிந்து அனைத்துயிரும் ஒன்றெண்ணும் உண்மை அறிவு மக்களிடம் வளர்தல் வேண்டும், சமயச் சண்டைகள் ஒழிய வேண்டும்.

இன்னோக்கங்கள் நிறைவேற உண்மை நெறி பற்றி இவர் எமக்கு இனியர் இவர் எமக்கு மாற்றார் என்கின்ற விருப்பு வெறுப்புகள் இன்றி… நண்பரே ஆயினும் ஆகுக. அவர் தம் சொல்லும் செயலும் கேடு சூழ்வதாயின் அஞ்சாது கண்டித்தொதுக்கப்படும் என்றார் பெரியார். குடிஅரசின் நூற்றாண்டை திராவிடர் கழகம் நாடுமுழுதும் கொண்டாடி மகிழ்ந்தது.

மே 1 எப்படி உலக அளவில் இன்றியமையாத நாளோ. அதே போலவே மே மாதம் முழுவதும் திராவிட இனத்தின் மேன்மைக்கு- திராவிடர் வாழ்வுக்கு, திராவிடர் இயக்கம் போராடியும் – திராவிட அரசு சட்டம் இயற்றியும் பல சாதனை சரித்திரங்களை நிகழ்த்தியிருக்கிறது. சுயமரியாதை இயக்க நூற்றாண்டை கொண்டாட காரணமாக இருக்கும் நிகழ்வுகள் பலவும் மே திங்களிலேயே நடைபெற்றிருக்கிறது.இத்தகைய சிறப்புமிக்க மே திங்களை திராவிட மே என்றே அழைக்கலாம்.

2010- டில்லி ஜசோலாவில் பெரியார் மய்யம் புதுப்பொலிவுடன் திறக்கப்பட்டது. தமிழ் மக்களின் கல்விக்காகவும், மருத்துவ உதவிகளுக்காகவும், தமிழர் களின் பொருளாதார வளர்ச்சிக்காகவும் இம்மய்யம் சிறப்புடன் இயங்குகிறது.

மே – 3: ஜாதி ஒழிப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறையேகிய  காரைக் கோட்டை இராமய்யன் விடுதலையாகி 1958 ஆம் ஆண்டு மரணமடைந்த நாள்.

மே – 5:  1914 அயோத்திதாச பண்டிதர் மறைவு: தீண்டத்தகாதவர்கள் என்போர் தங்களை ஜாதியில்லாத திராவிடர்கள் என்று பதிவு செய்ய சொன்னவர். 1885-ஆம் ஆண்டு அயோத்திதாச பண்டிதர், ஜான் ரத்தினத்தோடு இணைந்து “திராவிட பாண்டியன்” என்ற இதழை தொடங்கினார்.. பின் 1891-ஆம் ஆண்டு திராவிட மகாஜன சபையை நிறுவிய பெருமைக்குரிய அயோத்திதாசர் மறைந்த நாள். அயோத்திதாசர் துணையோடும் திராவிடத்தைக் காப்போம்.

மே – 7: 1814 –  சமஸ்கிருதமே மூத்த மொழி என்று நம்பப் பட்டிருந்த  நாளில் (காரல்மார்க்ஸ் உள்பட) திராவிட மொழியே  மூத்த மொழி என ஆய்ந்து, திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் தந்த அறிஞர் கால்டுவெல் பிறந்த நாள் . திராவிடம் போற்றிய பெம்மான் கால்டுவெல் புகழைப்பாடுவோம்.

1883 – தமிழவேள் உமா மகேசுவரனார் பிறந்தநாள் .

1964 – கடவுள் புராண பித்தலாட்டங்களை எதிர்த்து பிரச்சாரம் செய்ய தந்தை பெரியார் பகுத்தறிவுப் படைைய உருவாக்கினார்.

மே –8: 1948 தூத்துக்குடி திராவிடர் கழகம் மாநாடு

1980 மயிலை சீனி வேங்கடசாமி மறைந்த நாள்

மே – 9: 1930 ஈரோட்டில் இரண்டாவது மாகாண சுயமரியாதை மாநாடு நடைபெற்றது .(முதல் நாள்)

1941 தமிழவேள் உமா மகேசுவரனார் மறைந்த நாள்

மே – 10:  பிரிட்டிஷ் இந்தியாவில் பெண்கள் வாக்களிக்க கூடாது என்று இருந்த தடையை  1921 ஆம் ஆண்டு  பானகல் அரசர்  அரசு நீக்கியது. நீதிக்கட்சி அரசு அரசு ஆணை எண் 108 சட்டம் மூலம் இந்திய துணைக்கண்டத்திலேயே முதலாவதாக பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிய வரலாற்றுச் சிறப்பு நாள்.

2000 ஆம் ஆண்டு 28 கோயில்கள் முன் திராவிடர் கழகம் சார்பில் அர்ச்சகர் உரிமைப் போராட்டம் நடைபெற்றது.

மே – 11: இயக்கத் தொண்டர்களுக்குத் தாயாகவும், போர்க்களத்தில் அறிவாசான் பெரியாரின் தளகர்த்தராகவும் விளங்கிய அன்னை நாகம்மையார் 1933 ஆம் மறைவுற்றார். அன்னை நாகம்மையார் மறைவுக்கு பெரியாரின் இரங்கல் அறிக்கை காவியத்தன்மை வாய்ந்தது.

நாகம்மாளை மணந்து வாழ்க்கைத் துணையாகக் கொண்டு 35 ஆண்டு காலம் வாழ்ந்துவிட்டேன். நாகம்மாளை நான்தான் வாழ்க்கைத் துணைவியாகக் கொண்டு இருந்தேனேயல்லாமல் நாகம்மாளுக்கு நான் வாழ்க்கைத் துணையாக இருந்தேனா என்பது எனக்கே ஞாபகத்திற்கு வரவில்லை என்று விரியும் அந்த இரங்கலோவியம். ஆதாரம்- குடிஅரசு – தலையங்கம் – 14.05.1933

1946 மதுரையில் கருஞ்சட்டை படை மாநாட்டு பந்தல்  வைத்தியநாத அய்யர் தூண்டுதலால்  எரிக்கப்பட்ட நாள். ஆனால் வரலாறு சொல்லும் செய்தி யாதெனில் கருஞ்சட்டைப்பட்டாளம் இன்றும் ஓய்வின்றி சமூகத்தொண்டாற்றிக்கொண்டிருக்கிறது.  வைத்தியநாத பார்ப்பனர் கும்பல் தடமற்று போனதை கண்கூடாகக் காண்கிறோம்.

1971-  இராவண காவியம் நூலுக்கு தடை நீக்கம்

மே – 12: 1933 திருச்சியில் கிருத்துவ திருமணத்தை தடையை மீறி நடத்தி வைத்ததற்காக தந்தை பெரியார் கைது செய்யப்பட்டார்.

மே – 13: 1985-  ஈழத் தமிழர்களின் இன்னல்களை உலக நாடுகளுக்கு கொண்டு செல்லும் நோக்கில் தமிழ் ஈழ ஆதரவாளர் அமைப்பு தொடங்கப்பட்டது.

2006ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர்  5ஆவது முறையாக தமிழ்நாடு முதலமைச்சராக பதவி ஏற்றார்: இக்காலத்தில் பல்வேறு சாதனைகளை கலைஞர் ஈட்டியிருந்தாலும், அவரின் சரித்திர சாதனைக்குச் சான்றாக, சமத்துவச் சமுதாயம் காணும் நோக்கில், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டம் நிறைவேற்றப்பட்டு, பல்வேறு ஜாதிகளைச் சேர்ந்த 216 பேருக்கு அர்ச்சகர் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. – அனைத்து ஜாதியினரும் ஒரே இடத்தில் வசிக்க ஏற்கெனவே உருவாக்கப்பட்டுள்ள 145 பெரியார் நினைவு சமத்துவபுரங்களுடன் மேலும் 95 சமத்துவபுரங்கள் அமைத்து 240 சமத்துவபுரங்கள் ஏற்படுத்தப்பட்டு,  தந்தை பெரியார் திருவுருவச் சிலை நிறுவும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

மே – 14: 1958 கோவில் தேவராயன் பேட்டை நடேசன் ஜாதி ஒழிப்பு போராட்டத்தில் இறப்பு.

மே – 15: சட்டக் கல்லூரி மாணவராக பயின்று வந்த ஆசிரியர் கி.வீரமணி,.

1960 ஆம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற திராவிடர் கழக மத்திய கமிட்டி கூட்டத்தில்  பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அப்போது, ஆசிரியருக்கு வயது 27 தான்.

ஆசிரியர் பற்றி பெரியாரின் படப்படிப்பு: திரு.கி.வீரமணி வெறும் ஆள் அல்ல. நம் தலைவர் போல, குருசாமியைப் போல அவர் பேசவில்லை. சற்றுத் துணிவாய்ப் பேசிவிட்டார். திரு.வீரமணி நம்மை போன் றவர் அல்ல – அவர் ஒரு வக்கீல். எவ்வளவோ நல்ல வாய்ப்பு அவரை அணுகக் காத்திருக்கிறது. அவற்றுக்குத் தடை எற்படலாம். என்னைப் பொறுத்தவரை அவருக்கு அப்படி ஏற்பட்டால் நமக்கு நல்லதாகிவிட்டது என்று தான் கருதுவேன். ஏன்? நம் இயக்கத்திற்கு ஒரு முழுநேரத் தொண்டன் நமக்குக் கிடைத்தாலும் கிடைக்கலாம் என்கிற ஆசை, இப்போது அவர் தொண்டு அரை நேரம், இனி அது முழு நேரமாகிவிடலாம்.

(30.10.1960 இல் திருவல்லிக்கேணி கடற்கரை சொற்பொழிவில் தந்தை பெரியார் ஆற்றிய உரை)

1998 –  ஈரோடு சமூக நீதி மாநாடு நடை பெற்றது

மே – 16:  1884 சென்னை மகாஜன சபை தோற்றம்.

1998 ஈரோடு திராவிட கழக இளைஞரணி மாநில மாநாடு.

2006 அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை திமுக அரசு அமைச்சரவையின் முடிவு செய்யப்பட்டது.

மே – 17: 1873 திருப்பாதிரிப்புலியூரில் ஞானியார் அடிகள் பிறந்த நாள் .

1981 தமிழ்நாடு முழுவதும் ஜாதியை பாதுகாக்கும் மனுதர்ம நகல் எரிப்புக் கிளர்ச்சி  நடைபெற்ற நாள்.

மே – 19: திராவிட மாணவர் கழகம் பிறக்க காரணமாய் இருந்த எஸ்.தவமணிராசன் 2001 ஆம் ஆண்டு மறைந்த நாள்.

மே – 20: 1845 – அயோத்திதாச பண்டிதர் பிறந்தநாள்

1921-  மாநிலக் கல்லூரியில் பார்ப்பனர் அல்லாத மாணவர்களை சேர்க்க குழு அமைக்கப்பட்ட நாள்.

மே – 21: அறிவியக்க ஆசான் பெரியாரும், அவர்தம் தலைமாணாக்கன் அண்ணா 1934 திருப்பூரில் நடைபெற்ற செங்குந்தர் 21 ஆவது வாலிபர் மாநாட்டில் சந்தித்து பேசினர். திராவிடர் வாழ்வு மறுமலர்ச்சியடைய காரணமாக இருந்த பொன்னாள்.

1959 டாக்டர் தர்மாம்பாள் மறைந்த நாள்

மே – 22: இந்தியாவில் நடைபெற்ற முதல் மனித உரிமைப் போரான  வைக்கம் போராட்டத்தில் 1928 ஆம் ஆண்டு தந்தை பெரியார் முதல் முறையாக கைது செய்யப்பட்டு, சிறைக்கொட்டடியில் அடைக்கப்பட்டார்.

1939 இந்திய எதிர்ப்பு போராட்டத்தில் சிறை சென்ற தந்தை பெரியார் விடுதலை செய்யப்பட்டார்.

மே – 23: 1958 திருவையாறு மஜித் ஜாதி ஒழிப்பு போராட்டத்தில் மறைவு .

1981 உடுமலை நாராயண கவி மறைந்த நாள்.

மே – 24: 1958 இடையாற்று மங்கலம் நாகமுத்து ஜாதி ஒழிப்பு போரில் ஈடுபட்டு முடிவெய்தினார்.

1967 – விடயபுரத்தில் சுயமரியாதை பயிற்சி பள்ளியில் கடவுள் இல்லை இல்லவே இல்லை என்ற புகழ்பெற்ற கடவுள் மறுப்பு வாசகம் ஒவ்வொரு கழக நிகழ்விலும் வழங்க வேண்டும் என பெரியார் அறிவித்தார்.

மே – 25: 1866 மூ.சி. பூரணலிங்கம் பிள்ளை பிறந்த நாள்.

1933 தந்தை பெரியார் மே நாள் கொண்டாடக் கோரி சுயமரியாதை இயக்கத் தோழர்களுக்கு முதன்முதலாக அறிவிப்பு செய்த நாள்.

1966 – தந்தை பெரியார் கட்டளையின்படி சங்கராச் சாரியாருக்கு நாடெங்கும் கருப்புக்கொடி காட்டப் பட்டது.

மே – 26: 1967 முனைவர் மா.ராசமாணிக்கனார் மறைந்த நாள்.

1989 பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையார் மறைந்த நாள்.

மே – 27: விநாயகக்கடவுளின் பெயரில் வர்ணா ஸரமத்தை இறுகப் பாதுகாப்பதை அறிந்த பெரியார் 1953 இல் புத்தர் நாள் விழா கொண்டாட வேண்டுமென அறிவித்து, நாடெங்கும் பிள்ளையார் உருவ பொம்மை உடைத்தார். எல்லாக் கடவுளர்களின் உருவபொம்மைகளும் உடைக்கப்படும் என்றும் பெரியார் சூளுரைத்தார்.

மே – 28: ஜாதியை நிர்மூலமாக்கும் வேலைத் திட்டங்களில் ஒன்றாக சுயமரியாதை திருமண முறையை தந்தை பெரியார் அறிமுகப்படுத்தினார். கைம்பெண் மணம், மறுமணம், காதல் மணம், பார்ப்பனர் தவிர்த்த மணமுறை உள்ளிட்டவை அடங்கும்.

1928 அருப்புக்கோட்டை அடுத்த  சுக்கில நத்தம் கிராமத்தில் பார்ப்பனியம் ஒழிந்த முதலாவது சுயமரியாதை திருமணம் தந்தை பெரியார் தலைமையில் நடைபெற்றது. அதிலும், கைம்பெண் திருமணம் என்பது வரலாற்று நிகழ்வாகும்.

மே – 30: 1958 ஜாதி ஒழிப்பு போரில் சிறைச்சென்ற பொறையார் தங்கவேல் மறைந்தார்.

திராவிடர் இயக்க வரலாற்றில் புதுமலர்ச்சியும் – புத்தெழுச்சியும் நிறைந்த  மே மாதத்தை திராவிட மே மாதமாக நினைவு கூர்வோம்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *