எய்ட்ஸ், ஆஸ்துமா, உடல் பருமன் உள்ளிட்ட 56 நோய்களை குணப்படுத்துவதாக விளம்பரம் செய்தால் நடவடிக்கை மாநில மருந்து உரிமை அலுவலர் எச்சரிக்கை

Viduthalai
2 Min Read

சென்னை, மே 30  எய்ட்ஸ், ஆஸ்துமா, காசநோய், நீரிழிவு, உடல் பருமன் உள்ளிட்ட 56 நோய்களை குணப்படுத்துவதாக விளம்பரம் செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில மருந்து உரிமம் வழங்கும் அலுவலர் (இந்திய முறை மருத்துவம்) மருத்துவர் ஒய்.ஆர்.மானேக்சா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்திய மருத்துவச் சங்கம் மற்றும் ஒன்றிய அரசுக்கு இடையே நடைபெற்று வரும் ஆட்சே பனைக்குரிய விளம்பரங்கள் வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த 26-ஆம் தேதி சில ஆணைகளை பிறப்பித்துள்ளது.

56 நோய்கள்

அதில் மருந்து மற்றும் அதிசய சிகிச்சை (ஆட்சே பனைக்குரிய விளம்பரங்கள்) சட்டம் 1954 மற்றும் 1955-ன்படி, 56 நோய்களை குணப்படுத்துவதாக ஆட்சேபனைக்குரிய வகையில் விளம்பரம் செய்வது சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது.

அதன்படி 1.குடல்அழற்சி, 2.தமனிதடிப்பு, 3.பார்வையின்மை, 4.ரத்தவிஷம், 5.பிரைட்ஸ்நோய், 6.புற்றுநோய்கள், 7.கண்புரை, 8.காதுகேளாமை, 9.நீரிழிவுநோய், 10.மூளைநோய்கள் மற்றும் கோளாறுகள், 11.கண்நோய்கள் மற்றும் கோளாறுகள், 12.கருப்பையின் நோய்கள் மற்றும் கோளாறுகள், 13. மாதவிடாய் கோளாறுகள், 14.நரம்பு மண்டல கோளாறுகள், 15.புரோஸ்டேடிக்சுரப்பியின் கோளாறுகள், 16.வீக்கம், 17.காக்காவலிப்பு, 18.பொதுவான பெண்நோய்கள் 19.அனைத்து வகை காய்ச்சல், 20.வலிப்பு நோய்கள், 21.பெண் மார்பின் வடிவங்கள் மற்றும் அமைப்புகள் 22.பித்தப்பைகற்கள், சிறுநீரக்கற்கள் மற்றும் சிறுநீர்ப்பைகற்கள், 23.கேங்க்ரீன்புண்கள், 24.கண்நோய்கள், 25.தைராய்டு வீக்கம் (காய்டர்). 26.இதயநோய்கள், 27.உயர் அல்லது குறைந்த ரத்த அழுத்தம், 28.விதைவீக்கம், 29.மனநோய் (ஹிஸ்டீரியா), 30.போலியோவாதம், 31.மனநோய், 32.தொழுநோய், 33. லுகோடெர்மா, 34.டெட்டனஸ், 35.லோகோ மோட்டர் அட்டாக்ஸியா, 36.லூபஸ், 37.நரம்புதளர்ச்சி, 38.உடல்பருமன், 39.பக்கவாதம், 40,பிளேக், 41.ப்ளூரிசி, 42. நிமோனியா, 43.வாதநோய், 44.சிதைவுகள், 45.ஆண்மைக்குறைவு, விறைப்புத்தன்மை பிரச்சினைகள், 46.பெரியம்மை, 47.உடல் உறுப்புகளை பெரிதாக்குதல், 48.பெண்மகப் பேறின்மை, 49.டிராக்கோமா. 50.காசநோய், 51.கட்டிகள், 52.டைபாய்டு காய்ச்சல், 53.இரைப்பை குடல் புண்கள், 54.சிபிலிஸ், கோனோரியா, கிரானுலோமா உள்ளிட்ட பாலியல் நோய்கள், 55.எய்ட்ஸ் மற்றும் 56.ஆஸ்துமா ஆகிய நோய்கள் தொடர்பாக ஆட்சேபனைக்குரிய வகையில் விளம்பரம் செய்தல் சட்டப் படி தடை விதிக்கப்பட்டுள்ளது.

சட்டப்படி நடவடிக்கை

எனவே, மேற்கண்ட நோய்களை சிகிச்சை அளித்து குணப்படுத்துவதாக சமூக ஊடகங்கள் உள்ளிட்ட எங்கும் விளம்பரம் செய்வது சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் அத்தகைய விளம்பரத்தை கண்டால், [email protected] என்ற இமெயிலில் புகார் அளிக்கலாம். ஆட்சேபனைக்குரிய விளம்பரங்கள் செய்பவர்கள் மீது டி.எம்.ஆர் 1954 சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *