அரசு சேவைகளை எளிமையாக்கும் ‘எளிமை ஆளுமை’ திட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

Viduthalai
3 Min Read

சென்னை, மே.30- தமிழ் நாடு அரசின் 10 அரசு சேவை களை எளிமையாக்கும் ‘எளிமை ஆளுமை’ திட்டத்தை முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இணைய வழியில் சேவை

தமிழ்நாட்டில் எங்கும் எப்போதும் அரசு சேவைகளை பொதுமக்கள் இணையவழி வாயிலாக உடனுக்குடன் பெறுவதற்கு வழிவகை செய் யப்படும் என்று 21.6.2021 அன்று சட்டமன்றத்தில் அறிவிக்கப் பட்டது. அதன் தொடர்ச்சியாக 2025-2026-ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் “எளிமையான நிர்வாகம் என்ற திட்டத்தின் கீழ், 8 அரசுத் துறையின் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்கள் பெறுவதற் கான வழிமுறைகள் மிகவும் எளிமையாக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வரும் ஆண்டில் பல்வேறு துறைகளில் 150 சேவைகளை இணையவழியில் வழங்க நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படும்” என்று அறிவிக் கப்பட்டது.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் சேவை களில் தற்போதைய நடைமுறை களை ஆராய்ந்து, அதிலுள்ள முக் கிய விதிமுறைகளை சீர் செய்து, ‘எளிமை ஆளுமை’ திட்டத்தின் கீழ் அனை வரும் சேவைகளை உடனடியாக இணைய வழியில் பெறும் வகையில் மாற்றிய மைக்கப்படுகிறது. இதற்காக 2 குழுக்கள் நியமிக்கப்பட்டு, முன்மொழிவுகளை ஆராய்ந்து உத்தரவுகளை பிறப்பிக்கும். அந்த உத்தரவுகளின் அடிப்படையில் திருத்தி அமைக்கப்பட்ட முடிவு களை முதலமைச்சரின் ஆலோ சனைகளை பெற்று அரசா ணைகள் பிறப்பிக்கப்படு கின்றன.

ஒரே நாளில் சான்றிதழ்

எளிமை ஆளுமையின் மூலமாக, தற்போது நடைமுறையி லுள்ள நேரடி ஆய்வுகள் ஆவண சரிபார்ப்பு போன்ற முறைகளுக்கு மாற்றாக சுய சான்றிதழ், இணைய வழி கேஒய்சி, டிஜிட்டல் கையொப்பம் இன்னும் பல வழிமுறைகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. முதற்கட்டமாக 10 சேவைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன. தற்போது சுகாதார சான்றிதழ் தேவைப்படும் வளாகங்களுக்கு கியுஆர் குறியீட்டுடன் அத் தகைய வளாகங்களின் பொறுப்பாளர்களின் உறுதி மொழியின் அடிப்படையில் இணையதளத்தில் ஒரே நாளில் சான்றிதழ் வழங்கப்படும்.பொது கட்டட உரிமத்தை கியுஆர் குறியீட்டுடன் ஒரே நாளில் பெற்றுக்கொள்ளலாம். அதுபோல, முதியோர் இல்லங்கள் உரிமம், பணிபுரியும் மகளிருக்கான தங்கும் விடுதிகள் உரிமம், மகளிர் இல்லங்கள் உரிமம் ஆகியவற்றையும் ஒரே நாளில் பெற்றுக்கொள்ளலாம்.

  கட்டட அனுமதி

சொத்துமதிப்பு சான்றிதழ் நீக்கப்படுகிறது. வெள்ளை வகை தொழிற்சாலைகள் பட்டியல் 37-இல் இருந்து 609 ஆக விரிவுபடுத்தப்பட்டுள்ளது 609 வகை தொழிற்சாலைகளை தொடங்குவதற்கும் இயங்குவ தற்கும் தமிழ்நாடு மாசு கட் டுப்பாடு வாரியத்திடம் அனுமதி பெறுவதில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. புன் செய் நிலத்தை விவசாயம் அல்லாத பிற தேவைகளான குடியிருப்பு அல்லது வணிக கட்டுமானத்திற்கு பயன் படுத்துவதற்கு, வேளாண்மைத் துறையிடம் தடையின்மை சான் றிதழ் பெறுவது கட்டாய மாகும். தற்போது முழு செயல்முறையும் இணையவழியில் மாற்றப்பட்டுள்ளது. விண்ணப்ப தாரர்கள் சுய சான்றளிக்கப்பட்ட ஆவணங்களை இணையவழியில் தாங்களாகவே சமர்ப்பிக்கலாம்.

சம்பந்தப்பட்ட வேளாண் துறை அலுவலர்கள், கோரிக் கையை ஆய்வு செய்து செய லாக்கத்திற்கு உட்படுத்த 21 நாட்கள் காலஅவகாசம் நிர்ண யிக்கப்பட்டுள்ளது. கோரிக் கைகள் 21 நாட்களுக்குள் பரிசீலிக் கப்படாவிட்டால், தடையின்மை சான்றிதழ் விண்ணப்பதாரருக்கு தானாகவே உருவாக்கப்பட்டு வழங்கப்படும்.

இனியும் தொடரும்

எந்தவொரு தனிநபர்,அரசு துறை, அரசு பொதுத்துறை நிறுவனம் அல்லது பிற அமைப் புகள், நன்னடத்தை சான்றிதழை இணையவழி மூலமாக விண்ணப்பித்து எளிமையாகவும், துரிதமாகவும் பெறலாம். அரசு ஊழியர்கள் கடவுச்சீட்டு (பாஸ்போர்டு) பெறுவதற்கான தடையின்மை சான்றிதழை பெற பின்பற்ற வேண்டிய பல வழிகளை தவிர்த்து ஒரே வழியாக, கடவுசீட்டிற்கு விண்ணப்பிக்கும் போது அந்தத் துறையின் மேல் அதிகாரிகளுக்கு முன் தகவல் கடிதம் அளிக்கும்முறை மட்டும் பின்பற்றப்படும்.

மனிதவளத்துறை முன்னெடுத் துள்ள இந்த எளிமை ஆளுமை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்து, முதியோர் இல்லங்களுக்கான உரிமச் சான்றிதழ், பணிபுரியும் மகளிருக்கான தங்கும் விடுதிகள் உரிமச் சான்றிதழ், மகளிர் இல்லங்களுக்கான உரிமச் சான்றிதழ், வெள்ளை வகை தொழிற்சாலைகள் பட்டியல் விரிவாக்க சான்றிதழ் ஆகிய வற்றை பயனாளிகளுக்கு வழங் கினார். படிப்படியாக நடப்பு ஆண்டில் மேலும் பல சேவைகள் இதுபோல் எளிமையாக்கப்படும் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *