காயங்களை 24 மணி நேரத்தில் குணப்படுத்தக் கூடுமா?

2 Min Read

காயங்களை ஆற்றுதல், மீளுருவாக்கம் செய்தல் மற்றும் செயற்கை தோல் உருவாக்கும் தொழில்நுட்பம் போன்ற மருத்துவ சிகிச்சைகளில் ஹைட்ரோசெல் (Hydrogels) மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்கின்றனர்.

புதிய அறிவியல் கண்டுபிடிப்பு ஒன்று மருத்துவ உலகை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. ஆல்டோ பல்கலைக்கழகம் மற்றும் பேய்ரூத் பல்கலைக்கழகம் இணைந்து, மனித தோலின் தன்மைகளை நகலெடுக்கும் ஹைட்ரோ ஜெல்லைக் கண்டறிந்துள்ளனர்.

இது காயங்களை வெறும் 4 மணி நேரத்தில் 90% சரிசெய்துவிடும். 24 மணி நேரத்தில் முழுவதுமாக குணப்படுத்தும் என்கின்றனர்.

காயங்களை ஆற்றுதல், மீளுருவாக்கம் செய்தல் மற்றும் செயற்கை தோல் உருவாக்கும் தொழில்நுட்பம் போன்ற மருத்துவ சிகிச்சைகளில் இது மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்கின்றனர்.

சுருக்கமாக ஆய்வாளர்கள் செயற்கையான தோலை உருவாக்கியுள்ளனர் எனக் கூறலாம். உங்களுக்கு ஓர் ஆழமான கீறல் விழுந்தால் இந்த ஹைட்ரோ ஜெல்லை அதன்மீது பொருத்தினால் அது மிக விரைவாக காயங்களை ஆற்றும். தற்போதுள்ள மருத்துவ முறைப்படி தையல் போடும்போது வாரக்கணக்கில் காத்திருக்க வேண்டியிருக்கும்.

தலைமுடிக்கான சிகிச்சைகள் முதல் உணவுப் பொருள்கள் வரை எல்லாவற்றிலும் ஜெல்கள் பயன்படுகின்றன. ஆனால் அவற்றில் மனித தோலின் குணங்களை அப்படியே கொண்டுவருவது சவாலான ஒன்று.

அறிவியல் அரங்கம்

மனித தோல், நெகிழ்வானது மட்டுமல்லாமல் காயங்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது. தோலைப்போல குணப்படுத்தும் தன்மை கொண்ட, பொருளை உருவாக்க அறிவியலாளர்கள் திணறிவந்துள்ளனர். இந்த புதிய ஹைட்ரஜன் ஜெல், nanosheet-enhanced polymer entanglement என்ற செயல்முறை மூலம் அதைச் சாத்தியப்படுத்தியிருக்கிறது.

ஹைட்ரோஜெல் பற்றிய ஆய்வு ஜார்னல் நேச்சர் மெட்டீரியல்ஸ் (journal Nature Materials) என்ற அறிவியல் இதழில் வெளியாகியுள்ளது. அதன்படி, ஆய்வாளர்கள் மிக மிக மெல்லிதான நேனோ ஷீட்களை சேர்த்து ஹைட்ரோ ஜெல்லை மேம்படுத்தியுள்ளனர்.

பொதுவாக மென்மையாக இருக்கும் ஹைட்ரோஜெல்கள், நேனோ ஷீட்களுக்கு இடையில் அடர்த்தியாக ஒழுங்கமைக்கப்பட்ட கட்டமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இது ஹைட்ரோஜெல்லை பலப்படுத்துவதுடன், தன்னைத்தானே சரி செய்துகொள்ளும் தன்மையையும் அதிகரிக்க உதவும்.

மனிதர்கள் இதுவரை உருவாக்கியுள்ள பல உயிரியல் திசுக்கள், வலிமையாகவும் அழுத்தமாகவும் இருந்தாலும், அவை சேதமடைந்தால் சரி செய்ய முடியாது.

ஹைட்ரோஜெல்லின் பயன்பாடுகள்!

இந்த ஹைட்ரோஜெல், காயங்களை ஆற்றுவது மட்டுமல்லாமல், மருந்து செலுத்துதல், ரோபோடிக்ஸ் செயற்கை உறுப்புகள் உருவாக்கும் ப்ராஸ்தடிக்ஸ் போன்ற பல துறைகளில் முன்னேற்றத்தைக் கொண்டுவரவுள்ளது.

இதன் விரைவாக குணமடையும் தன்மை, தீ காயம்பட்டவர்கள், அறுவை சிகிச்சை நோயாளிகள், மற்றும் நாள்பட்ட காயங்கள் உள்ளவர்களுக்கு பயனளிக்கும் எனக் கூறுகின்றனர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *