விஜய் – சுமி ஆர்னிகா ஆகியோரின் ஜாதி மறுப்புத் திருமணத்தை பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் நடத்தி வைத்தார்.
பின்பு மணமக்கள் தமது உறவினர்களுடன் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்று ‘பெரியார் உலக நிதி’யாக ஆயிரம் (1000) ரூபாயை வழங்கினர். (28.5.2025)