தமிழ்நாடு கடற்கரையில் அரிய கடல் புழு! கடலியல் ஆய்வாளர்களின் கண்டுபிடிப்பு

Viduthalai
1 Min Read

சென்னை, மே 29- தமிழ்நாடு கடற்கரையில் புதிய கடல் நூற்புழு இனத்தை கடலியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த புதிய கண்டுபிடிப்பு, கடல் உயிரினங்களின் பல்லுயிர் பெருக்கத்தை அறிந்துகொள்வதற்கு ஒரு முக்கிய மைல்கல் ஆகும்

கண்டுபிடிப்பின் பின்னணி

இந்திய விலங்கியல் ஆய்வு மய்யத்தை (ZSI) சேர்ந்த மூத்த ஆய்வாளர் டாக்டர் அஞ்சும் ரிஸ்வி மற்றும் ஆராய்ச்சியாளர் ரித்திகா தத்தா தலைமையிலான குழு, தமிழ்நாடு கடற்கரையில் நடத்திய ஆய்வின் போது இந்த புதிய கடல் நூற்புழு இனத்தை கண்டுபிடித்தார்கள்.

இந்த நூற்புழுவுக்கு, மறைந்த இந்திய நூற்புழு ஆராய்ச்சியாளர் பேராசிரியர்
எம்.எஸ்.ஜெய்ராஜ்புரியின் நினைவாக Pheronous jairajpurii என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்பு, Pheronous இனத்தின் மூன்றாவது இனமாக உலகளவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் 1966இல் தென்னாப்பிரிக்காவிலும், 2015இல் சீனாவிலும் (பின்னர் 2023இல் கொரியாவிலும்) இந்த இனத்தின் மற்ற இரண்டு உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.

பழனி, திருச்செங்கோடு உள்ளிட்ட

11 நகராட்சிகளின்
தரத்தை உயர்த்தியது

தமிழ்நாடு அரசு

சென்னை, மே 29- தமிழ்நாட்டில் திருச்செங்கோடு, உடுமலைப்பேட்டை, பழனி உள்பட 11 நகராட்சிகள் தரம் உயர்த்தப்படும் என நகராட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு சட்டப் பேரவையில் அறிவித்து இருந்தார்.

அதன்படி திருச்செங்கோடு, உடுமலைப்பேட்டை, பழனி சிறப்புநிலை நகராட்சிகளாகவும், நந்திவரம்-கூடுவாஞ்சேரி, ராமேஸ்வரம், பல்லடம் தேர்வுநிலை நகராட்சிகளாகவும், மாங்காடு, குன்றத்தூர், வெள்ளக்கோவில், அரியலூர், அம்பாசமுத்திரம் ஆகியவை முதல்நிலை நகராட்சிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *