தஞ்சை, ஜூன் 26- 18.06.2023 ஞாயிறு மாலை 6.30 மணியளவில் தஞ்சை ரெட்டிப்பாளையம் சாலை, அன்னை சிவகாமி நகரில் அமைந்துள்ள பெரியார் பெருந்தொண்டர் பி.வி.இராமச்சந் திரன் நினைவு பெரியார் படிப்பகத்தின் நிர்வாகக் குழு கலந்துரையாடல் கூட் டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட கழகத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் தலைமை வகித்தார், வருகை தந்த அனைவரையும் மாநகர கழக தலைவர் பா.நரேந்திரன் வரவேற்று பேசினார்.
கூட்டத்தின் தொடக்கத்தில் மாநில ப.க.தலைவர் கோபு.பழனிவேல், படிப் பகத்தின் நிலைப்பாடுகள் பற்றியும், அதை சிறப்பாகப் புதுப்பித்து, பொது மக்கள் பயன்படும் வகையில் நடை முறைப்படுத்த நிர்வாகக் குழுவினர் களைப் புதுப்பிக்க வேண்டும், புதிய உறுப்பினர்களையும், நன்கொடையா ளர்களையும் அதிகப் படுத்தி படிப்பகத் திற்கு விழா எடுத்து பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று கூறினார்.
தொடர்ந்து, தஞ்சை தெற்கு ஒன்றிய கழக செயலாளர் நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம், வடக்கு ஒன்றிய கழக செயலாளர் கா.அரங்கராசன், அன்னை சிவகாமி நகர் இளைஞரணி அமைப் பாளர் மு.தேவா, பிள்ளையார்பட்டி கழக செயலாளர்,ம.முருகேசன், ஓட்டு நர் செந்தில், மாவட்ட கழக இளைஞ ரணி து.தலைவர் ப.விசயகுமார், மருத்து வக் கல்லூரி பகுதி செயலாளர் த.கோவிந்தரா சு, மாநகர ப.க.செய லாளர் இரா.வீரகுமார்,மாவட்ட பகுத் தறிவு ஆசிரியரணி அமைப்பாளர் கு.குட்டிமணி, ஒன்றிய ப.க.செயலாளர் மா.இலக்குமணசாமி, மாவட்ட ப.க. செயலாளர் பாவலர் பொன்னரசு, மாவட்ட ப.க.தலைவர் ச.அழகிரி, மாவட்ட கழக தொழிலாளரணி தலைவர் ஆட்டோ செ. ஏகாம்பரம், ஆகியோரது உரைக்குப் பின், முன் னிலை வகித்த பேராசிரியர் முனைவர் பி.ஆர்.வீரமணி, மாவட்ட கழக காப்பாளர் மு.அய்யனார் படிப்பகத்தின் செயல்பாடுகள் குறித்தும், பி.வி.ஆர். அவர்களின் சிறப்புகள் பற்றியும் எடுத்துக் கூறி பி.வி.ஆர்.அவர்களின் நூற்றாண்டு விழாவையும் இணைத்து நடத்துவோம் என்று கூறினார்.
பின்னர், இறுதியாக, மாவட்ட தி.க. தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் அவரது உரையில், தந்தை பெரியார் படிப்பகத்தின் பெயர் தாங்கிய பி.வி. ஆர். நூற்றாண்டு, வைக்கம் போராட்ட நூற்றாண்டு, முத்தமிழ் அறிஞர் டாக் டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு ஆகிய இணைந்த “முப்பெரும் விழா ” வாக நடத்துவோம், என்று கூறி, படிப்பகத்திற்கு புதிய நிர்வாகக் குழுவி னரையும் அறிவித்தார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள்
தஞ்சை ரெட்டிப்பாளையம் சாலை, அன்னை சிவகாமி நகரில் உள்ள பெரியார் பெருந் தொண்டர் பி.வி.இரா மச்சந்திரன் நினைவு பெரியார் படிப் பகத்தை உடனே புதுப்பித்து செயல் படுத்துவது எனத் தீர்மானிக்கப் படு கிறது.
வைக்கம் போராட்ட நூற்றாண்டு, முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு, “சுயமரியாதை சுடரொளி” பெரியார் பெருந் தொண்டர் பி.வி.இராமச்சந்திரன் நூற்றாண்டு ஆகியவற்றை இணைத்து முப்பெரும் விழாப் பொதுக் கூட்டமாக நடத்துவது எனத் தீர்மானிக்கப் படுகிறது.
தந்தை பெரியார் படிப்பகத்தின் புதிய நிர்வாகக் குழு : புரவலர்கள் : கனடாவில் வாழும் பேராசிரியர் சோம.வேலாயுதம், டாக்டர் சோம.இளங்கோவன், வழக்குரைஞர் சி.அமர்சிங், மு.அய்யனார், பேராசிரியர் முனைவர் பி.ஆர்.வீரமணி. தி.மு.க. பக்கிரிசாமி, விசயராகவன் ஆகியோர்.
தலைவர் : பா.நரேந்திரன்
துணைத் தலைவர்கள் : ஆட்டோ செ.ஏகாம்பரம், ஆசிரியர் மா.இலக்கு மணசாமி.
செயலாளர் : த.கோவிந்தராசு,
துணைச் செயலாளர்கள் : செ.சிகாமணி, மு.தேவா.
பொருளாளர் : பாவலர் பொன்னரசு.
அமைப்பாளர் : பேராசிரியர் கு.குட்டி மணி.
செயற்குழு உறுப்பினர்கள்: இரா.செந் தூர்பாண்டியன், பேராசிரியர் முனைவர் இரா.மணிமேகலை, கா.அரங்கராசன், நெல் லுப்பட்டு அ.இராமலிங்கம், மா.முருகேசன், ப.விசயகுமார், ஓட்டுநர் செந்தில், கோ. அன்பரசன், இரா.கபிலன், ஆரோக்கியதாஸ், களிமேடு இர.அன்பழகன் ஆகியோர் நியமிக்கப்பட்டார்கள்.
படிப்பகத்திற்கு செய்தித்தாள்கள் மற்றும் இதழ்கள் வழங்குவதாக அறிவித்த நன்கொடையாளர்கள்:
விடுதலை – திராவிடர் கழகம் தலைமைக் கழகம்
உண்மை – வழக்குரைஞர் சி.அமர்சிங்
தி மாடர்ன் ரேசனலிஸ்ட் & தி இந்து தமிழ் திசை – பேராசிரியர் பி.ஆர்.வீரமணி
முரசொலி – மு.அய்யனார்
தீக்கதிர் – ப.விசயகுமார்
தி இந்து (ஆங்கிலம்) – கு.குட்டிமணி
தினத்தந்தி – கா.அரங்கராசன்
தினகரன் – மா.இலக்கு மணசாமி
எம்லாய் மெண்ட் நியூஸ் – இரா .வீரகுமார்
பெரியார் பிஞ்சு – கோபு.பழனிவேல் ஆகியோர் வழங்குவதாக கூறினர்.
இறுதியில் படிப்பகச் செயலாளர் த.கோவிந்தராசு நன்றி கூறினார்.