புதுச்சேரி, மே 28– திராவிடர் கழகம் சார்பில் புதுச்சேரியில் எதிர்வரும் 08.06.2025 அன்று நடைபெற வுள்ள நூற்றாண்டு நிறைவு விழா கருத்தரங்கம் தொடர்பாக மாவட்டம் முழுவதும் பிரச்சாரம் நடைபெறுகிறது.
அதன் ஒருபகுதியாக புதுச்சேரி கடைத்தெருவில் கருத்தரங்கத் துண்டறிக்கைக் கொடுக்கப்பட்டது. நிதி வசூலும் செய்யப்பட்டது.
மாவட்டத் கழகத் துணைத் தலைவர் மு.குப்புசாமி தலைமையில் தொழிலாளரணிச் செயலாளர் கே.குமார், நகராட்சி கழகப் பொறுப்பாளர்கள் மு.ஆறுமுகம், களஞ்சியம் வெங்கடேசன், விடுதலை வாசகர் வட்டச் செயலாளர் ஆ.சிவராசன், கா..நா.முத்துவேல், ஊடகவியலாளர் பெ.ஆதிநாராயணன் , வில்லியனூர் இரா.சுந்தர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.