பொதுவாக இன்று பலரும் மதுவுக்கு அடிமையாகி இருக்கின்றனர் .பலர் இதனால் பாதிக்கப்பட்டு அதை விட முடியாமல் அவதிப்படுகின்றனர்
நீங்கள் மதுவுக்கு அடிமையாகி அதிலிருந்து மீள முடியாமல் இருந்தால் ,இந்த குறிப்புகளை படித்துப் பாருங்கள்
- ஆல்கஹால் சருமத்தில் சுருக்கத்தை கொண்டு வரும்.
- ஆல்கஹால் உடலில் நீரிழப்பு மற்றும் சோம்பலை ஏற்படுத்தி நம்மை சோம்பேறியாக்கும் .
- ஒருவர் ஆல்கஹாலுக்கு அடிமையானால் அது அவரின் கல்லீரல் மற்றும் சிறுநீரக செயல்பாட்டை சேதப்படுத்தும்.
- ஒருவர் அதிகமாக மது அருந்துவதால் அவரின் மூளை செல்கள் சுருங்கிவிடும்.
- அதிகமாக மது அருந்துவதால் , சரியான நேரத்தில் முடிவுகளை எடுக்க இயலாமை, வேலையில் ஒழுங்கற்ற தன்மை, போன்றவை உண்டாகும்
- மேலும் மதுவுக்கு அடிமையானால் கவனம் செலுத்த இயலாமை, உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமை மற்றும் கோபம் போன்ற அறிகுறிகள் காணப்படுகின்றன.
- மதுவிற்கு அடிமையானால் அது நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துகிறது.
- ஆல்கஹால் முதலில் உங்களை போதையில் ஆழ்த்தினாலும், அதன் விளைவுகள் குறைந்த தூக்கத்தில் இருந்து எழுந்திருக்க செய்கிறது .