திருநெல்வேலி, மே 28– கடந்த 11.05.2025 அன்று நடந்த கழக மகளிரணி- திராவிட மகளிர் பாசறை கலந்துரையாடலில், தொடர்ந்து மகளிர் சந்திப்பு களை நடத்த வேண்டும் என்ற தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வழிகாட்டுதலுக்கிணங்க, 24.05.2025 அன்று திருநெல்வேலி கழக மாவட்டத்தில் திராவிடர் கழக மகளிரணி – திராவிட மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட கழக ஒப்புதலோடும், அவர்களின் ஒத்துழைப் போடும் ஏற்பாடு செய் யப்பட்டது.
கழக மகளிரணி மாவட்டத் தலைவர் இரா.பானுமதி தலைமை ஏற்றார். மாவட்டத் தலைவர் ச.ராஜேந்திரன், மாவட்டச் செயலாளர் இரா.வேல்முருகன், கழக காப்பாளர் இரா.காசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைப் பொதுச்செயலாளர் வழக் குரைஞர் சே.மெ.மதிவதனி சிறப்புரை ஆற்றினார். தந்தை பெரியார் அவர்களின் பெண் விடுதலை கருத்துகள் இக்காலத்தில் எவ்வளவு அதிமுக்கியத்துவம் வாய்ந்தது என்பது குறித்தும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அயராத பணிகள் குறித் தும் எடுத்துரைத்தார். தொடர்ந்து, கழகத்தில் மகளிர் தோழர்களின் பங்கு அதிகமாக இருக்க வேண்டும் என்றும்,வரும் செப்டம்பர் 17 அன்று தந்தை பெரியாரின் பிறந்தநாள் நிகழ்ச்சியை மகளிர் முன்னின்று நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. மேலும், குடும்ப விழா – குடும்ப சந்திப்பு களை தொடர்ந்து நடத்துவது என்றும் தீர்மானிக்கப் பட்டது.
கலந்துரையாடல் கூட்டத்தில் புதிதாக அறிவிக்கப்பட்ட திரு நெல்வேலி மாவட்ட கழக மகளிர் பொறுப்பாளர்கள் விவரம் வருமாறு:
மாவட்ட மகளிரணி தலைவர் – ரா.பானுமதி
மாவட்ட மகளிரணி செயலாளர் – வே.உஷா
மாவட்ட மகளிர் பாசறை அமைப்பாளர் – ம. சங்கரம்மாள்.