தருமபுரி மாவட்டம்,கோல்டன் தெரு மத்திய மாவட்ட வி.சி.க செயலாளர் த.கு.பாண்டியனின் தாயார் பொன்னியம்மாள் 25-05-2025 அன்று மறைவுற்றார், அம்மையாருக்கு 26-05-2025 மதியம் 12 மணிக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் மாவட்டத் தலைவர் கு.சரவணன் தலைமையில், மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை.ஜெயராமனால் மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் அரூர் ப.க. மாவட்டத் தலைவர் சா.இராஜேந்திரன், தருமபுரி பக மாவட்டச் செயலாளர் இர.கிருஷ்ணமூர்த்தி, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மா.செல்லதுரை, மேனாள் மாவட்டத் தலைவர்கள் வீ.சிவாஜி, மு.பரமசிவன், மாவட்ட இளைஞரணித் தலைவர் மா.முனியப்பன், இளைஞரணி தோழர்கள் அம்ஜத், சிவாஜி சோபா சுரேஷ், சா.குப்புசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.