உரத்தநாடு, மே 27- உரத்தநாடு தெற்கு ஒன்றிய திராவிடர் கழக இளைஞரணி, மாணவர் கழக சார்பில் சந்திப்போம், சிந்தப்போம் என்ற கலந்துறவாடல் நிகழ்ச்சி உரத்தநாடு பெரியார் மன்றத்தில் 24.05.2025 காலை 10.30 மணியளவில் நடைபெற்றது.
தெற்கு ஒன்றிய இளைஞரணி தலைவர் ரெ.ரஞ்சித்குமார் அனைவ ரையும் வரவேற்று உரை யாற்றினார். நிகழ்விற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் மாநல் பரமசிவம் தலைமை வகித்தார்.
தஞ்சை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சி.அமர் சிங் கூட்டத்தை தொடங்கிவைத்து உரை யாற்றினார். “சந்திப்போம் சிந்திப்போம்” தலைப்பில் கழக பேச்சாளர் தஞ்சை இரா. பெரியார் செல்வன் சிறப்புரை ஆற்றினார்.
பெரியார் வீர விளையாட்டு கழக மாநில செயலாளர் ராம கிருஷ்ணன், ஒன்றிய தலைவர் த.ஜெகநாதன், திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூர பாண்டியன் தஞ்சை மாவட்ட வழக்கு ரைஞர் அணி செயலாளர் க.மாரிமுத்து, மண்டல கோட்டை செந்தில் குமார், திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒன்றிய குழு உறுப்பினர் மா. துரைராஜ், மாணவர் அணி தலைவர் நிரஞ்சன் குமார் உள்ளிட்ட இளைஞர் அணி, மாணவர் அணி தோழர்கள் பங்கேற்று சிறப்பித்தார்கள்
காவாராப்பட்டு அரசு பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்த தியா என்ற மாணவி அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாட பிரிவில் 100 க்கு 100 மதிப்பெண் பெற்றதை பாராட்டி மாவட்ட தலைவர் சால்வை அணிவித்து சிறப்பித்தார். 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற கழக பொறுப்பாளர் பு.செந்தில்குமாரின் மகன் முகில் அவர்களையும் பாராட்டி சிறப்பு செய்தார்கள். கழக பேச்சளார் பெரியார் செல்வன் உரையே கேட்ட மாணவர்கள் இருவர் (ஆதவன், சாதனா) தன் கையில் கட்டி இருந்த மூடநம்பிக்கை கயிறை தோழர்கள் முன்னிலையில் அறுத்து எறிந்தனர். பெரியார் பிஞ்சி புகழினி நன்றி கூறினார்கள்.