சேலம் ரயிலடியில் கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜூக்கு உற்சாக வரவேற்பு

viduthalai
2 Min Read

இன்று (27.5.2025) காலை சேலம் வருகை தந்த பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களுக்கு ரயிலடியில்,  மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை ஜெயராமன் தலைமையில், சேலம் மாவட்ட தலைவர் வீரமணி ராஜு, ஆத்தூர் மாவட்ட தலைவர் அ.சுரேஷ், சேலம் மாவட்டச் செயலாளர் சி.பூபதி, சேலம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் வழக்குரைஞர் அசோகன், சேலம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் ச. சுரேஷ்குமார், சேலம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் பொறியாளர் தை.சிவகுமார், சு. இமயவரம்பன், சக்திவேல், சரவணன், மோகன்ராஜ், வீ.மணிமாறன், இளங்கோவன், பிரபாகரன் உள்ளிட்ட தோழர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர்.

அரியூர் பி. ரெங்கராஜ்
படத்திறப்பு – நினைவேந்தல்

இலால்குடி கழக மாவட்டம், அரியூர் கழக தலைவர், பெரியார் பெருந்தொண்டர் பி.ரெங்கராஜ் படத்திறப்பு நிகழ்ச்சி 25.5.2025 அன்று நடைபெற்றது.

படத்தினை திறந்து வைத்து உரை நிகழ்த்திய இலால்குடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் முனைவர் வீ. அன்புராஜா, ரெங்கராஜ் அவர்கள் திராவிடர் கழகத்திற்கும், அதன் தலைமைக்கும் கட்டுப்பட்டு பல்வேறு ஆர்பாட்டங்கள், மறியல்கள், போராட்டங்கள் உட்பட பல பொது கூட்டங்களிலும் கலந்து கொண்டவர். அரியூர் பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் தந்தை பெரியார் பிறந்தநாள் அன்று திராவிடர் கழகத்தின் கொடியினை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கி மகிழ்வார்கள். ஜாதி ஒழிப்பு, மூட நம்பிக்கை ஒழிப்பு போன்ற பணிகளில் ஈடுபட்டு மக்கள் தொண்டு ஆற்றிய கொள்கை வீரர் என்று புகழாரம் சூட்டினார்.

அரியூர் பகுதி இளைஞர்கள் திராவிடர் கழகத்தில் இணைந்து தொண்டரமாற்ற வர வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார். இலால்குடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணை தலைவர் எஸ்.ஜி.இளஞ்சேட் சென்னி, வீர வணக்க உரை நிகழ்த்தினார்.

ச. சண்முகவேலு, ஜெ.முருகேசன், கங்கா பரமானந்தன், எஸ்.ஜீ.பரமானந்தன், கச்சமங்கலம் மணி, ஆதிகுடி ஆர். அன்பழகன், ஆர்.இரவி சந்திரன், ஜி.நாகராஜ், எஸ். சிவமணிகண்டன், பெ.கோவிந்தன் மறைந்த ரெங்கராஜ் வாழ்வினையர் அகிலாண்டம், மகன் இரவிசந்திரன், மகள் செல்வி மற்றும் குடும்பத்தினர்கள் உமா, மாலா உள்பட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *