தமிழ்நாடு அரசு – இந்தியாவின் இப்படிப்பட்ட ஒப்பற்ற திராவிட மாடல் அரசு கிடையாது என்று சொல்லக்கூடிய பெருமை மிகுந்த நமது ஒப்பற்ற முதலமைச்சர் தலைமையில் இருக்கும் அரசு, இந்தியாவுக்கே வழிகாட்டக்கூடிய அரசு. அறிஞர்களின் நூல்களை கட்சி வேறுபாடு இல்லாமல், கருத்து மாறுபாடு இல்லாமல் புத்தகங்களை நாட்டுடைமை ஆக்கி, அவர்களின் குடும்பங்களுக்கு உரிய தொகையை கொடுக்கிறார்கள். இது மக்களுக்குப் பயன்படக்கூடிய நல்ல பணி. பொள்ளாச்சி உமாபதி, முத்துக்கூத்தன் புத்தகங்களை நாட்டுடைமை ஆக்க வேண்டும் என்று சொன்னார். அவர் சொன்னதை அனைவர் சார்பாக நான் வழிமொழிகிறேன். அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வோம்.
– கலைமாமணி முத்துக்கூத்தன் நூற்றாண்டு விழாவில்
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (25.05.2025)