கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 26.5.2025

2 Min Read

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* நான்கு மாநிலங்களில் அய்ந்து பேரவை தொகுதிகளுக்கு ஜூன் 19 இடைத்தேர்தல்: ஜூன் 23 வாக்கு எண்ணிக்கை; தேர்தல் ஆணையம் அறிவிப்பு.

* அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சி.பி.அய். போன்றவற்றை தி.மு.க துணிவுடன் எதிர் கொள்ளும். எதிர்க்கட்சியை போல அடிமை சாசனம் எழுதிக் கொடுத்ததில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

* கீழடி குறித்து ஒன்றிய அரசின் தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனத்தின் சர்ச்சைக்குரிய கருத் துக்கு திமுக இளைஞர் அணி கண்டனம்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* ‘வீர உணர்வு இல்லை’: பஹல்காமில் நடந்த தாக்குதலின் போது சுற்றுலாப் பயணிகள் பயங்கரவாதிகளுக்கு எதிராக போராடியிருக்க வேண்டும், தாக்குதலில் கணவர்களை இழந்த பெண்கள் வீர உணர்வு கொண்டிருக்கவில்லை, அரியானா பாஜக எம்.பி. ராம்சந்தர் ஜாங்கிரா சர்ச்சை பேச்சு.

* பாஜக தலைவர்களின் இது போன்ற பேச்சுகளுக் காக மோடி மன்னிப்பு கேட்க வேண்டும். ஜங்க்ராவை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்

* பாஜக எம்பி ஜங்க்ராவின் தற்போதைய பேச்சு பாஜகவின் அற்பத்தனமான எண்ணத்தை வெளிப்படுத்துகிறது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே காட்டம்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* கொச்சி கடற்கரையில் சரக்கு கப்பலுக்கு நடுக்கடலில் ஏற்பட்ட விபத்தில் எண்ணெய் கசிவு; விழுந்த கொள்கலன்கள் கேரள கடலோரப் பகுதிகளை மிதந்து அடையக்கூடும் என்பதால், எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, மேலும் கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் கொள்கலன்களுக்கு அருகில் செல்வதை தவிர்க்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.

தி டெலிகிராப்:

* ஆர்.எஸ்.எஸ்ஸின் ஒவ்வொரு செயலுக்குப் பின்னாலும் ஹிந்து ராஷ்ட்ரம் என்ற லட்சியம் உள்ளது என்கிறார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்

டைம்ஸ் ஆப் இந்தியா:

* ஊர்க்காவல் படையில் திருநங்கைகள்: அனை வரையும் உள்ளடக்கிய திராவிட மாடல் ஆட்சி யில், திருநங்கைகளை ஊர்க்காவல் படை சேவை களில் சேர்க்க முடிவு; முதல் கட்டத்தில், 50 திருநங்கைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு சென்னை, ஆவடி மற்றும் தாம்பரம் ஆகிய இடங்களில் பணியமர்த்தப்படுவார்கள்.

* ‘எதிர்க்கட்சி ஆட்சியின் போது ஊழல் செய்ததற்காக திமுக ஏன் தன்னை சமரசம் செய்து கொள்ள வேண்டும்?’ மாநில உரிமைகளை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டோம். எந்த மிரட்டலுக்கும் திமுக அடிபணியாது: தமிழ்நாட்டின் நலனுக்காகவே டில்லி சென்றேன்: எதிர்க்கட்சிகளை போல அடிமை சாசனம் எழுதிக் கொடுத்ததில்லை: விமர்சனங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டமான பதிலடி.

.- குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *