நமக்கு உரிமையுள்ளதில் போய்ப் புகுவதில் என்ன தவறு? இந்தக் கோயிலைக் கட்டியது யார்; அதற்கு வேண்டியவைகள் அத்தனையையும் கொடுப்பது நாம்; நமக்கு உரிமையான கோயிலுக்குள் நாம் போவது எப்படித் தவறாகும்? நமக்கும், கோயிலுக்கும் சிறிதும் சம்பந்தமில்லாத பார்ப்பான் உள்ளே இருந்து கொண்டு நம்மை ‘வெளியே நில்; நீ சூத்திரன்’ என்கிறான். உள்ளே வந்தால் சாமி தீட்டாகிவிடும் என்கின்றான். இன்னும் எத்தனை நாளைக்கு நாம் இந்த இழிவைப் பொறுத்துக் கொண்டு சூத்திரனாக இருப்பது? நாம் இதை நீக்காமல் போனால் வேறு யார் வந்து நீக்குவார்கள்?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1658)

Leave a Comment