அய்ஏஎஸ் உள்பட்ட சிவில் சர்வீஸ் பதவி களுக்கான தேர்வுகள் நேற்று (25.5.2025) நடைபெற்றன. சென்னை மண்ணடியில் அமைக்கப்பட்டு இருந்த தேர்வு மய்யத்தில் அறிவிப்பு பலகையில் ஹிந்தியில் மட்டும் தகவல்கள் இடம்பெற்று இருந்ததால் தேர்வர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. எந்த அறைக்குச் சென்று தேர்வு எழுதுவது என்பதில் தேர்வர்களுக்கு மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட்டது.