தி.மு.க.வுடன் கூட்டணி பற்றி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயலாளர் கே. நவாஸ் கனி கருத்து: திமுகவுடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கூட்டணி என்பது வெறும் அரசியலுக்காக அல்ல. கொள்கை ரீதியான கூட்டணி. எங்களுக்கு சிறப்பான முக்கியத்துவத்தை திமுக வழங்குவதால் நிபந்தனைகளுக்கு அவசியம் இல்லை. சட்டப்பேரவை தேர்தலில் எங்களுக்கான தொகு திகளை கேட்டு பெற்று அதில் கூட்டணி கட்சிகளின் ஒத்துழைப்போடு வெற்றி வாய்ப்பை உறுதி செய்வோம் என்று கூறியுள்ளார்.
வட மாநில கலாச்சாரம்?
வீடுகளை, பைக்குகளை வாடகைக்கு எடுப்பது போல மனைவி களை வாடகைக்கு கொடுக்கும் பழக்கம் மத்திய பிரதேசத்தின் சிவபுரி கிராமத்தில் இருக்கிறது. மனைவி தேவைப்படுவோர் அந்த கிராமத்தில் இருக்கும் பெண்களை ஒரு மாதத்திற்கு அல்லது ஒரு ஆண்டுக்கு வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம். இதனை அப்பெண்களின் தகப்பன் அல்லது கணவனேதான் செய்கின்றனர் என்பது அடுத்த வேதனை. இப்படி ஏதாவது கேள்விப்பட்டு இருக்கீங்களா?
புதிய ரூ.500, ரூ.20,
ரூ.10 ரூபாய் நோட்டுகள்
ஆர்.பி.அய் அறிவிப்பு
ரூ.500, ரூ.20 மற்றும் ரூ.10 கரன்சி நோட்டுகள் புதிதாக வெளியிடப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. காந்தி படங்கள் கொண்டிருக்கும் தற்போதைய கரன்சி நோட்டின் வடிவமைப்பில் எந்த மாற்றமும் இருக்காது. ஆனால், ரிசர்வ் வங்கியின் தற்போதைய கவர்னரான சஞ்சய் மல்ஹோத்ராவின் கையெழுத்து புதிய நோட்டுகளில் இடம்பெறும். பழைய நோட்டுகளும் செல்லும்.
நாடு முழுவதும்
257 பேருக்கு கரோனா
நாடு முழுவதும் கரோனா பரவல் சற்றே தீவிரமடைந்திருக்கிறது. மொத்த மாக 257 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக கேரளாவில் 182 பேருக்கு புதிய வகை கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 66, மஹாராட்டிராவில் 56. குஜராத்தில் 15, ராஜஸ்தானில் 2. அரியானாவில் 4, டில்லியில் 5, சிக்கிம் மற்றும் மே.வங்கத்தில் தலா ஒருவருக்கு இதுவரை கரோனா வைரஸ் கண்டறி யப்பட்டுள்ளது.
கீழடி ஆய்வறிக்கையில் திருத்தம் தேவையில்லை
தமிழ்நாட்டின் நகர நாகரீகம் இருந்த காலத்தின் உண்மைத்தன்மையை உறுதி செய்யுமாறு, கீழடி ஆய்வறிக்கை திருப்பி அனுப்பப் பட்டது. இந்நிலையில், தொன்மை அறிவியல் முறைப்படி ஆய்வு செய்யப்பட்டு கி.மு.800 -கி.மு 500 என உறுதி செய்யப்பட்ட அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. எனவே, ஏற்கனவே அளிக்கப்பட்ட அறிக்கையில் மாற்றம் தேவை யில்லை என்று ஒன்றிய தொல்லியல் துறைக்கு, அமர்நாத் ராமகிருஷ்ணன் பதிலளித்துள்ளார்.
வெம்பக்கோட்டையில்
3ஆம் கட்ட அகழாய்வு நிறைவு
விருதுநகர் மாவட்டம் வெம்பக் கோட்டையில் 3ஆம் கட்ட அகழாய்வு பணிகள் நிறைவடைந்துள்ளன. இதுவரை நடந்த 2 கட்ட அகழாய்வில் சங்க காலத்தைச் சேர்ந்த கறுப்பு – சிவப்பு மண்பாண்ட ஓடுகள், இரும்பு பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. கடந்த 2024, ஜூன் 18ஆம் தேதி தொடங்கிய 3ஆம் கட்ட அகழாய்வு பணிக்காக 22 குழிகள் தோண்டப்பட்டு, பவள மணி, தங்கமணிகள், சங்கு வளையல்கள் என 5,003 பழங்காலப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.