சென்னை, மே 25- முதல் பட்டதாரி, ஜாதி, இருப்பிட சான்றிதழ் உள்ளிட்ட பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு தேவையான சான்றிதழ் களை விண்ணப்பித்த ஒரு வாரத்தில் வழங்க வேண்டும் என்று தமிழ் நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது.
உயர்கல்வி நிறுவனங்கள்
நாடு முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளிவந்து விட்டன. அதன் தொடர்ச்சியாக மேல்படிப்புக்கான சேர்க்கை தொடங்கி உள்ளது.
நீட் தேர்வு முடிவுகள் மட்டும் வெளிவர வேண்டி உள்ளதால் எம். பி.பி.எஸ். படிப்பை தவிர மற்ற அனைத்து மருத்துவ படிப்புகள், பொறியியல், சட்டக்கல்லூரிகள், பாலி டெக்னிக் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து உயர்கல்வி நிறுவனங்களில் சேர விண்ணப்பம் செய்வதற்கான நடவடிக் கைகள் தொடங்கி உள்ளன. இந்த விண்ணப்பங்கள் செய்வதற்கு மாணவ-மாணவிகளுக்கு முதல் பட்டதாரி, ஜாதி, இருப்பிடம் மற்றும் வருமான சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்கள் தேவைப்படுகின்றன. இந்த சான்றிதழ்கள் அனைத்தும் வருவாய்த்துறை மூலம் வழங்கப்படுகின்றன.
மாணவ- மாணவிகள் அதற்கு இ-சேவை மய்யங்கள் அல்லது https://www.tnesevai.tn.gov. in/ என்ற இணையதளத்தில் நேரடியாக விண்ணப்பிக் கலாம்.
நிராகரிக்கக் கூடாது
மாணவ- மாணவிகளி டம் இருந்து வரும் இந்த விண்ணப்பங்களை முக்கியத்துவம் கொடுத்து ஒப்புதல் தர வேண்டும் என்று தமிழ்நாடு அரசு வருவாய்த்துறை ஊழி யர்களுக்கு உத்தரவிட்டு உள்ளது. அதிகபட்சமாக ஒருவாரத்திற்குள் இந்த விண்ணப் பங்களை பரிசீலித்து அனுமதி தர வேண்டும். ஆவணங்கள் இல்லாத பட்சத்தில் சம் பந்தப்பட்ட நபர் களை தொடர்பு கொண்டு அவர்களிடம் அதனை பெற்று சான்றிதழ்கள் வழங்க வேண்டும். எக் காரணம் கொண்டும் விண்ணப்பத்தை நிராக ரிக்க கூடாது என பல்வேறு அறிவுறுத்தல்களை தமிழ்நாடு அரசு வழங்கி உள்ளது.
அதேபோல மாணவ- மாணவிகளும் உரிய ஆவணங்களுடன் விண் ணப்பிக்க வேண்டும். தங்களது சேர்க்கைக்கு என்னென்ன சான்றிதழ் கள் தேவையோ அவற்றை முன்பே அறிந்து அதனை திட்டமிட்டு உடனே விண்ணப்பம் செய்ய வேண்டும் என்றும் அரசு கேட்டு கொண்டு உள்ளது.