அன்பும் பண்பும் பாசமும் மிக்க தமிழர் தலைவர் கி.வீரமணி அய்யா அவர்களுக்கு,
வி.ஜி.சந்தோசத்தின் வணக்கம்! வாழ்த்துக்கள்!
90இல் 80 என்னும் புகழ்வாய்ந்த தங்களின் பிறந்தநாள் விழா எல்லா நிலையிலும் சீரும் சிறப்புடன் நிகழ்ந்தேற, மலேசியாவிலிருந்து வாழ்த்துகின்றேன்.
மலேசியாவில் இரண்டு திருவள்ளுவர் சிலைகள் திறப்பதற்காகச் சென்றுள்ளேன். தமிழகம் வந்ததும் தங்களை நேரில் சந்திக்கின்றேன்.
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின்
தொகுத்ததொரு கொள்கைகளை பறைசாற்றி
வகுத்த நன்நெறி வழி நடந்து
அகத்தில் அன்பு நிறை கொண்டோய்!
சுகமாய்ப் பனையாண்டு (120) ஆண்டுகள்
சுந்தரமாய்ச் சுடர் முகம்காட்டி வாழ்க வாழ்கவே!
என்றும் அன்புடன்
டாக்டர் வி.ஜி.சந்தோசம்