சென்னை, மே 24 நடப்புக் கல்வி யாண்டில் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது.
மாநகராட்சி பள்ளி
சென்னை மாநகராட்சியின் கீழ், 206 தொடக்கப் பள்ளிகள், 130 நடுநிலைப் பள்ளிகள், 46 உயர்நிலைப் பள்ளிகள், 35 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 417 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்தப் பள்ளிகளில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 2025 – 2026ஆம் கல்வியாண் டுக்கான மாணவர் சேர்க்கை, மார்ச் மாதம் துவங்கியது. இதைத் தொடர்ந்து, மாணவர் சேர்க்கையை அதிகரிக்க மாநகராட்சி தரப்பில் சிறப்பு கவனம் எடுக்கப்பட்டது. அதன் பயனாக, கடந்த ஆண்டை விட மாணவர் சேர்க்கை இரண்டு மடங்கிற்கு மேல் நடந்திருப்பதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு, புதிதாக 6 ஆயிரம் மாணவர்கள் மட்டுமே சேர்ந்த நிலையில், இந்த ஆண்டில் இதுவரை, 15 ஆயிரத்து 618 மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர்.
மேலும் அதிகரிக்கும்
அதிகபட்சமாக யூ.கே.ஜி.யில், 7 ஆயிரத்து 386 மாணவர்கள் சேர்ந்துள் ளனர். இன்னும் சேர்க்கை நடந்து வருவதால் மாணவர்கள் சேர்க்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு, 10ஆம் மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளை முடித்த மாணவ, மாணவியர்களின் எதிர்கால கல்வித் திட்டங்களை உறுதிப்படுத்தும் நோக் கில் மாநிலம் முழுவதும் முக்கிய ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இந்த ஆய்வுகள், மாணவர்கள் உயர் கல்விக்கான அடுத்த கட்ட நடவடிக்கை களை எடுத்து வருகிறார்களா என்பதை கண்காணிப்பதற்காகவே முன்னெடுக் கப்படுகின்றன. . சமீபத்தில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் தேர்ச்சி பெற்றவர்கள் 7.53 லட்சம் பேர். மாணவியர்கள் 4.54 லட்சம், மாணவர்கள் 3.57 லட்சம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் இன்னும் கல்லூரிக்கு விண்ணப்பிக்காத மாணவர்கள், விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், விண்ணப்பித்த மாணவர்கள் எந்தக் கல்வி நிறுவனத்தில் சேர விரும்புகிறார்களோ, அந்தக் கல்லூரிகளில் அவர்கள் சேர உதவும் வகையில் நட வடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
வீடு வீடாகச் சென்று
காவல்துறையினர் ஆய்வு
காவல்துறையினர் ஆய்வு
சென்னையின் பெரும்பாக்கம் பகுதியில், 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் கல்வி பயணத்திற்கு உதவ, தாம்பரம் மாநகர காவல்துறையினர் நேரடியாக வீடு வீடாக சென்று மாண வர்களின் விருப்பங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த செயலால் காவல்துறைக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணமாக உள்ளது. காவல்துறை மட்டும் இல்லாமல், மாவட்ட கல்வி அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சி மற்றும் நகராட்சி அலுவலகங்களும் இணைந்து மாணவர்களின் உயர்கல்விக்கான வாய்ப்புகளை அதிகரிக்க, தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் இந்த தீவிர நடவடிக்கைகள், உயர்கல்வியை நிலை நாட்டும் முக்கிய கூறாக பார்க்கப்படுகிறது.