குற்றாலம், ஜூன் 27 பெரியாரியல் பயிற்சிப் பட்டறை ஜூன் 28, 29, 30 ஜூலை 1 ஆகிய நான்கு நாட்கள் குற்றாலத்தில் தொண்டறச் செம்மல் வீகேயென் மாளிகையில் நடைபெற உள்ளது.
திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களும் திராவிடர்கழக முக்கிய பொறுப்பாளர்கள், பேராசிரியர் பெருமக்களும் பங்கேற்று பெரியாரியல் வகுப்பு எடுக்க உள்ளனர்.
தென்காசி மாவட்ட கழக பொறுப்பாளர்கள் தோழர்களின் கடும் உழைப்பில் மிகச்சிறந்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன
குற்றாலம் முதன்மை அருவி, அய்ந்தருவி, பழைய குற்றாலம் அருவி அனைத்திலும் சாரல் தொடங்கியுள்ளதால் தண்ணீர் வரத் தொடங்கி யுள்ளது. குற்றாலத்தில் கொள்கை சாரலோடு குற்றாலச் சாரலில் நனைய அன்புடன் வரவேற் கிறோம். எங்களோடு இணைந்து அனைவரையும் குற்றாலச் சாரலும் வரவேற்கிறது
நாளை சந்திப்போம் குற்றாலத்தில்
– இரா.ஜெயக்குமார்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
(பெரியாரியல் பயிற்சிப் பட்டறை பொறுப்பாளர்), திராவிடர் கழகம்