பாவலர் மணி புலவர் ஆ.பழநி அய்யா அவர்கள் எழுதிய 18 நூல்களை அனிச்சம் அறக்கட்டளை வெளியிட்டுள்ளது. அந்த 18 நூல்களையும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு அனிச்சம் அறக்கட்டளை தலைவர் சாமி.திராவிடமணி (எண் 45/1,2 பெரியார் தோட்டம், இரயில்வே நிலையம் சாலை, பழைய ஜி.எச். அருகில், காரைக்குடி – 630 001) புலவர் ஆ.பழநி அவர்களின் பெயரன் அழகுபாண்டி ஆகியோரால் வழங்கப்பட்டது.
நூல்கள் அனைத்தையும் பெரியார் பகுத்தறிவு நூலகம் மற்றும் ஆய்வு மய்யத்திற்கு பெற்றுக் கொண்டோம்.
நூலகத்திற்கு நூல்களை வழங்கியமைக்கு நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
மிக்க நன்றி…
– நூலகர், பெரியார் பகுத்தறிவு ஆய்வு நூலகம், பெரியார் திடல், சென்னை