பள்ளியில் கல்வி கற்பதன் மூலம் மாணவர்களின் பகுத்தறிவை வளரச் செய்ய வேண்டும். பகுத்தறிவைப் பற்றி அதற்காகச் சிறிது நேரத்தையாவது ஒதுக்கிச் சொல்லித் தர வேண்டாமா? பகுத்தறிவுப் போட்டிகள் வைத்து அதில் மாணவர்களை ஈடுபடச் செய்ய வேண்டும். பகுத்தறிவு பற்றிப் போதிக்காததால்தான் நமது மக்கள் கல்வியிலும் அறிவற்றவர்களாக இருக்கின்றனர். அதன் காரணமாகவே நமது நாட்டில் வளர்ச்சியே இல்லை. மற்ற நாட்டவர்கள் கண்டுபிடித்த விஞ்ஞான அதிசய அற்புதங்களை அனுபவிக்கின்றோமே ஒழிய நாம் கண்டுபிடித்தது என்று சொல்ல ஏதாவது உண்டா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’