சுயமரியாதை இயக்க நூற்றாண்டு – குடிஅரசு இதழ் நூற்றாண்டு விழா கும்பகோணத்தில் எழுச்சியுடன் நடத்திட முடிவு

Viduthalai
2 Min Read

கும்பகோணம், மே 24– கும்பகோணம் பெரியார் மாளிகையில் கழக மாவட்ட   கலந்துரையாடல் கூட்டம் 22.05.2025. அன்று மாலை 5.30 மணியளவில் எழுச்சியுடன் நடைபெற்றது.

நிகழ்விற்கு குடந்தை நகரத் தலைவர் பீ.ரமேஷ், கடவுள் மறுப்பு கூறி அனைவரையும் வரவேற்றார்.

மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் தலைமையேற்று நோக்கவுரையாற்றினார்.

குடந்தை மாவட்ட தலைவர் கு.நிம்மதி, காப்பாளர் வை.இளங்கோவன், தஞ்சை  மாவட்ட காப்பாளர் மு.அய்யனார், தஞ்சை மாவட்ட தலைவர் சி.அமர்சிங், மன்னார்குடி மாவட்ட தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன், நாகை மாவட்ட தலைவர் வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன், திருவாரூர் மாவட்ட தலைவர் சு.கிருஷ்ணமூர்த்தி, குடந்தை மாவட்ட செயலாளர் சு.துரைராசு, நாகை மாவட்ட செயலாளர் ஜெ.புபேஸ்குப்தா, காரைக்கால் மாவட்ட செயலாளர் பொன்.பன்னீர்செல்வம், மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் கு.இளமாறன், ஆகியோர் முன்னிலை ஏற்று உரையாற்றினர்.

மாநில எழுத்தாளர் மன்ற செயற்குழு உறுப்பினர் க.குருசாமி, பொதுக்குழு உறுப்பினர் ஆ.தமிழ்மணி, மாவட்ட துணைத் தலைவர் வ.அழுகுவேல்,ப.க.மாவட்டசெயலாளர் க.சேதுராமன், மாவட்ட மகளிரணி தலைவர் எம்.திரிபுரசுந்தரி, தஞ்சை மாவட்ட மகளிரணி தலைவர் அ.கலைச்செல்வி, மாவட்ட தொழிலாளரணி தலைவர் த.ஜில்ராஜ், குடந்தை ஒன்றிய தலைவர்  கோவி.மகாலிங்கம்,  மாவட்ட தொழிலாளரணி து.செயலாளர் அ.சங்கர், மாவட்ட ப.க.அமைப்பாளர். க.திருஞானசம்பந்தம், பாபநாசம் ஒன்றிய செயலாளர் சு.கலியமூர்த்தி, திருவிடைமருதூர் ஒன்றிய துணை தலைவர் முருகானந்தம், மாவட்ட தொழிலாளரணி செயலாளர் பெரியார் கண்ணன், மாவட்ட  ப.க.அமைப்பாளர் க. திருஞானசம்பந்தம், மாவட்ட தொழிலாளரணி தூணை தலைவர் சிவக்குமார்,விவசாய அணி அமைப்பாளர் அய்யம்பேட்டை அறிவழகன், சேக்கிழார் ரியாஸ், இளஞ்செழியன்,ஆகியோர் கலந்துக் கொண்டு உரையாற்றி சிறப்பித்தனர்.

இறுதியாக குடந்தை மாநகர செயலாளர் க.சிவக்குமார், நன்றி கூறினார்.

தீர்மானங்கள்

பட்டிஸ்வரம் நகர தலைவர் செம்.தமிழ்பாண்டியன், அவர்களுக்கு வீர வணக்கத்தையும் குடும்பத்தினருக்கு  ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

மே 10 அன்று சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்ற தலைமைச் செயற்குழு கூட்ட தீர்மானங்களை ஏற்று செயல்படுத்துவது  என முடிவு செய்யப்படுகிறது.

07-06-2025 அன்று மாலை கும்பகோணம் ராயா கிராண்ட் அரங்கத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைமையில் நடைபெறும் சுயமரியாதை இயக்கம். ‘குடிஅரசு’ நூற்றாண்டு நிறைவு சிந்தனை செயலாக்க கருத்தரங்கத்தில் பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்கும் வகையில் மிக எழுச்சியுடன் நடத்துவது என முடிவு செய்யப்படுகிறது. நிகழ்ச்சியை விளம்பரப்படுத்தும் வகையில் சுவர்எழுத்து விளம்பரம். பிளக்ஸ். விளம்பரம். உள்ளிட்ட விளம்பரங்களை சிறப்பாக செய்வது எனவும் -கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, மன்னார்குடி, நாகை, திருவாரூர், காரைக்கால், மயிலாடுதுறை, மாவட்டத்திலுள்ள கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் குடும்பத்துடன் பெருந்திரளாக பங்கேற்று சிறப்பிப்பது எனவும் முடிவு செய்யப்படுகிறது.

மாவட்டத்திலுள்ள கழகத் தோழர்கள் இல்லந்தோறும் கழக கொடியேற்றும் நிகழ்வை தொடர் பணியாக செய்வது என தீர்மானிக்கப்படுகிறது.

கும்பகோணம் வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது என முடிவு செய்யப்படுகிறது.

நன்கொடை வழங்குபவர்கள்

வழக்குரைஞர் சி.அமர்சிங் – ரூ.10,000

வழக்கறிஞர் ரமேஷ் – ரூ. 10000

மு.அய்யனார் – ரூ. 5000

ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் – ரூ. 5000

க. குருசாமி – ரூ. 2000

கோவி.மகாலிங்கம் -ரூ.  5000.

நாச்சியார் கோவில் சங்கர் – ரூ. 2000

பேராசிரியர் சேதுராமன் – ரூ. 2000

சேக்கிழார் – ரூ. 100

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *