கரூர், மே 24– கரூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் மாவட்டத் தலைவர் ப. குமாரசாமி தலைமையில் கரூர் ராயனூர் பொன் நகர் மறைந்த கி பழனிச்சாமி இல்லத்தில் நடைபெற்றது.
மாவட்ட காப்பாளர் வே ராஜு, பொதுக்குழு உறுப்பினர் கட்டளை உ. வைரவன், மாவட்டச் செயலா ளர் ம. காளிமுத்து, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ம. ஜெகநாதன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கருவூர் கன்னல், புஞ்சை புகலூர் வேர் பலா அழகரசன், ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கடந்த 11-05-2025 அன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற கழக தலைமைச் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்றுவது என்று தீர்மானிக்கப்படுகிறது.
கடந்த12-05-2025 அன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற கழக இளைஞர் அணி, மாணவர் கழகம், மகளிர் அணி, மகளிர் பாசறை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்த இக் கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானிக்கப்படுகிறது.
நிகழ்ச்சியில் மாவட்டக் கலை இலக்கிய அணி செயலாளர் ராமசாமி, பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் பொம்மன், கிருஷ்ணராயபுரம் ஒன்றிய தலைவர் பெருமாள், செயலாளர் ராமலிங்கம், துணைச் செயலாளர் வடிவேல், மாவட்ட இளைஞரணி தலைவர் விக்னேஷ், நகர இளைஞரணி செயலாளர் காந்திகிராமம் ராஜா, கரூர் நகரத் தலைவர் ம. சதாசிவம், கரூர் ஒன்றிய செயலாளர் நானா பரப்பு பழனிச்சாமி, சந்தானகிருஷ்ணன் குளித்தலை நகர தலைவர், புலியூர்அமைப்பாளர் வீரமணி, ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் நிறைவில் இளைஞரணி தலைவர் விக்னேஷ் நன்றியுரையாற்றினார்.
தஞ்சாவூரில் புத்தக விற்பனை அமோகம்
தஞ்சாவூர், மே 24- தஞ்சை மாவட்ட கழகத் தோழர்கள் தஞ்சை பர்மா பஜாரில் இயக்க வெளியீடுகளை விற்பனை செய்தனர். அங்கு உள்ள கடைகளின் நிறுவனர்கள் தங்களது ஊழியர்களுக்கு வழங்குவதாகக் கூறி புத்தகங்களை மொத்தமாக வாங்கி மகிழ்ச்சியில் ஆழ்த்தினர். மாவட்ட தலைவர் சி.அமர்சிங், மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், மாநில மாணவர் கழகச் செயலாளர் இரா.செந்தூரபாண்டியன், மாநகர செயலாளர் இரா.வீரகுமார், மாவட்ட காப்பாளர் மு.அய்யனார், மாவட்ட துணைத்தலைவர் ப.நரேந்திரன், மாவட்ட இளைஞரணி தலைவர் ஆ.பிரகாஷ் ஆகியோர் இப்பணியில் ஈடுபட்டனர்.
இயக்கப்பணியில் இயக்கத் தோழர்கள்
ஊற்றங்கரையில் சந்திப்புக் கூட்டம்
ஊற்றங்கரையில் சந்திப்புக் கூட்டம்
ஊற்றங்கரை, மே 24- கடந்த 11-05-2025 அன்று காலை 10 மணிக்கு,சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைமையில் மாநில இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது.அதில் இளைஞர்களின் இயக்க வேலைத்திட்டம் குறித்து ஏழு முக்கிய தீர்மானங்கள் இளைஞரணி துணைச் செயலாளர்களால் முன்மொழியப்பட்டது.
அதனை நிறைவேற்றும் செயல்திட்டத்தில் 23.5.2025 அன்று மதியம் 12 மணியளவில் கிருஷ்ணகிரி மாவட்ட,ஊற்றங்கரை அழகி ஸ்டுடியோவில் மாவட்ட இளைஞரணித் தலைவர் சீனிமுத்து இராஜேசன் தலைமையில் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்டச் செயலாளர் செ.பொன்முடி, துணைத் தலைவர் வண்டி.ஆறுமுகம், ப.க. இரு.கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மா.செல்லதுரை மாநில கலந்துரையாடல் கூட்டத்தில் முன்மொழியப்பட்ட தீர்மானங்களை சிறப்பாக செயல்படுத்த வேண்டியும், இளைஞரணியினர் இயக்கப்பணிகளை மேலும் வேகப்படுத்திட வேண்டியும் கருத்துரை வழங்கினார்.