பெரியகுளம், மே 24– இன்று (24.05.2025) காலை 9.30 மணி அளவில் தேனி மாவட்டம் பெரியகுளம் கலைவாணி அரங்கத்தில், திராவிடர் கழகம் சார்பில் 53ஆவது பெரியாரியல் பயிற்சிப் பட்டறை எழுச்சியுடன் நடைபெற்று வருகிறது.
பொதுக்குழு உறுப்பினர் மு.அன்புக் கரசன் வரவேற்று உரையாற்றினார்.
மாவட்ட தலைவர் ம.சுருளிராஜ், நிகழ்ச்சிக்கு தலைமையேற்று உரையாற் றினார். மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன். தொடக்க உரையாற்றி தொடங்கி வைத்தார். மாவட்ட காப்பாளர் ச.இரகுநாகநாதன். மாவட்ட செயலாளர் பூ.மணிகன்டன், மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி, மாவட்ட துணைத் தலைவர் ஸ்டார் நாகராஜன், பொதுக்குழு உறுப்பினர் பி.பேபிசாந்தாதேவி, மாவட்ட இளைஞரணி தலைவர் க.சரவணன், ப.க.செயலாளர் ப.மோகன், கழக பேச்சாளர் ஆண்டிப்பட்டி கண்ணன். விளையாட்டு அணி மாநில செயலாளர் பூவரசன், திராவிட மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் பெரியார் மணி, ஒன்றிய மகளிரணி தலைவர் முருகேஸ்வரி. ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்.
தந்தை பெரியாரின் வாழ்க்கை வர லாறு என்ற தலைப்பில் மா.அழகிரிசாமி முதல் வகுப்பு எடுத்தார். பார்ப்பன பண்பாட்டு படையெடுப்பு என்ற தலைப்பில் முனைவர் அதிரடி க.அன்பழகனும், சமூக நீதி வரலாறு என்ற தலைப்பில் முனைவர் வா.நேருவும். தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் சாதனைகள் என்ற தலைப் பில் எழுத்தாளர் வி.சி.வில்வமும் பேசினர். தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி காணொலி வாயிலாக பேசினார்.
மந்திரமா? தந்திரமா? அறிவியல் விளக்க நிகழ்வினை ஈட்டி கணேசனும், பேய் ஆடுதல். சாமி ஆடுதல் என்னும் அறிவியல் விளக்க நிகழ்வினை மருத்துவர் இரா.கவுதமனும், தந்தை பெரியாரின் பெண்ணுரிமைச் சிந்தனைகள் என்ற தலைப்பில் கழகத் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியாரும் தொடர்ந்து வகுப்பு எடுத்தனர்.
கழக மாநில ஒருங்கிணைப்பாளர் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை பொறுப் பாளர் இரா.ஜெயக்குமார் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தி வருகிறார்.