தாம் ஏற்றுக்கொண்ட உயரிய சமத்துவக் கொள்கைக்காக உயிரையே விலையாகக் கொடுத்த மாமனிதர்களின் பட்டிய லில், மதிப்புமிக்க இடத்தினில் இருக்கத்தக்கவர் உடையார் பாளையம் ஆசிரியர் வேலாயுதம். தந்தை பெரியார் அவர் களின் திராவிடர் கழகத்தில் தம்மை இணைத்துக் கொண்டு பகுத்தறிவுக் கொள்கைகளைப் பரப்புரை செய்தமைக் காகப் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டார். இன்று அவர் படுகொலை செய்யப்பட்ட நாள் (நவம்பர் 13, 1947).
ஆசிரியர் வேலாயுதம் அரியலூர் மாவட்டம், செயங் கொண்டம் அருகேயுள்ள கரடிக்குளம் என்னும் சிற்றூரில் சாமிநாதன் என்பவருக்கும் பொன்னாச்சி அம்மையாருக்கும் அய்ந்தாவது ஆண் குழந்தையாக 1910ஆம் ஆண்டு சூலைத் திங்கள் முதல் நாள் அன்று பிறந்தவர்.
செயங்கொண்டத்தில் தொடக்கப் பள்ளியில் சேர்ந்து, உடையார்பாளையம் நடுநிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று, திருச்சியில் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து இரண்டு ஆண்டுகள் படித்தார். அத்து டன் நில்லாமல் சிதம்பரம் சென்று அண்ணாமலைப் பல் கலைக்கழகத்தில் உடற்பயிற்சி கல்வியும், சாரணர் பயிற்சியும் பெற்றவர். ஆசிரியர் பணியில் சேர்ந்து தாம் பணியாற்றிய இடங்களில் சிறப்பாக பணியாற்றினார். காடு கழனியெல்லாம் அலைந்து பெற்றோரை சந்தித்து அவர்களின் குழந்தைகளை பள்ளியில் சேர்க்கப் பாடுபட்டார். அவ்வாறு சிறுவனாக மாடு மேய்த்துக்கொண்டிருந்து, வலுக்கட்டாயமாக பள்ளியில் வேலாயுதம் அவர்களால் சேர்க்கப்பட்ட ஒருவர்தான் எங்கள் ஊரான உல்லியக்குடியில் அமைந்த தொடக்கப் பள்ளியின் முதல் தலைமை ஆசிரியராக இருந்த மாரிமுத்து அவர்கள்.
வேலாயுதம் அவர்கள் தமது கற்பிக்கும் பணியை ஒரு அறிவு பரப்பும் தொண்டாக மேற்கொண்டவர். , மக்களையும் மாணவர்களையும் அறியாமை இருளிலிருந்து மீட்கும் ஒரு வாய்ப்பாகக் கருதியே தமது கல்விக் கடமையை ஆற்றினார்.
பள்ளியில் மாணவர்களிடமும் இரவில் பெற்றோர்களைத் திரட்டிக் கூட்டங்கள் கூட்டியும் நாடகங்கள் நடத்தியும் கல்வி யின் நன்மைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
தந்தை பெரியார் அவர்களின் ‘குடிஅரசு’ மற்றும் விடு தலை இதழ்களைப் படிக்க நேர்ந்ததும் அவர் தோற்றுவித்த ‘சுயமரியாதை இயக்கம்’ என்பதன் – துணிச்சல் மிக்க வீரராகவே மாறிவிட்டார் வேலாயுதம். 1938-ஆம் ஆண்டு பகுத்தறிவுப் பகலவன் தலைமை யேற்ற முதல் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம், இந்த 28 அகவை இளம் ஆசிரியரை, அந்த ஈரோட்டு அரிமாவின் அழுத்தமான உண்மைத் தொண்டராகவே-போராடும் புரட்சிப் பிறவியாகவே ஆக்கி விட்டது. கடமையாகக் கருதினார்.
“பெரியமனிதர்களின் கண்ணும் கருத்தும் இயற்கையாய் இவர்மீது விழுந்தன. பிறகு சொல்லவா வேண்டும்? சுயமரியாதையாம், சுயமரியாதை! அவன் மரியாதை(?)யாக அடங்கிக் கிடக்கப் போகிறானா இல்லையா? என்று கேட்டனர் சிலர். எதற்கய்யா இந்தவம்பும் பொல்லாப்பும்? என்று நல்லெண்ணத்தோடு கருத்துச் சொன்னவர்கட்கு விளக்கங்கள் அளித்தவர். மிரட்டியவர்களுக்கும் எச்சரிக் கைக் கடிதங்களுக்கும் பணிவதாக இல்லை அவர்.
கல்லுடைத்து, நிலத்திருத்தி, வியர்வையைச் சிந்தி, மாட மாளிகைகளை ஆக்கிய தொழிலாளி எண்சாண் உடம்பைக் குறுக்கிப்படுத்து, வற்றிய முகமும் குழியான கண்களுமாய் மீண்டும் வெளிக்கிளம்பி நீர்மூழ்கி முத்தெடுக்கும் இயந் திரமாகிறான் பாட்டாளி. புரியாத மொழியிலே தெரியாத சொற்களைப்பேசி எந்த உழைப்புமில்லாமல் ஏய்த்துப் பொருள் பெற்று இன்பமாய்க் காலங்கழிக்கிறான் பார்ப்பான்! இந்தச் சுரண்டல் தவறல்வா?” என்று முழங்குவதை அவர் நிறுத்திக் கொள்ளவேயில்லை. இரண்டாம் இந்தி எதிர்ப்பு போராட்டக் காலத்தில் இயக்க நிலையினை எடுத்து விளக்கு வதில் மிக்க ஈடுபாடு காட்டினார்.
பெண்ணுரிமைக்குப் போராடுவதிலும் தம் தலைவர் பெரியார் அடிச்சுவட்டிலேயே பீடுநடை போட்டார் வேலா யுதம். பொது இடங்களில் ஆண்களுக்கு இணையாகப் பெண்கள் பேச முடியாதபடி ஊமைகளாய் வீட்டுக்குள் ளேயே ஒடுக்கப்பட்டிருந்த அந்தக் காலத்தில், தம்முடைய மூத்த மகள் மங்கையர்க்கரசி சிறுமியாக இருந்த போதே அவரை மேடை ஏற்றிப் பேசச் செய்தார். அவரது தலை முடிக்குக் கிராப் வெட்டி விட்டார். அவர் மிதிவண்டி ஓட்டக் கற்றுக்கொடுத்தார். கணவரை இழந்த கைம்பெண்களின் மறுமணத்தையும், வெவ்வேறு ஜாதியினரின் ஜாதியினரின் மணத்தையும் கடும் எதிர்ப்புக்களை மீறி இவர் நடத்தி வைத்தார்.
புரட்சிக் கொள்கைகளைப் பரப்பியதன் மூலம் தங்கள் இனத்தின் ஆதிக்க வேருக்கே வேட்டு வைக்கிறாரே என்று ஆரியர் நெஞ்சத்தில் வேலாயுதம் மீது வெறுப்புத் தீ கொழுந்துவிட்டது. தீண்டாமைக் கொடுமை கொண்ட ‘வருண பேத’ சாதி முறைக்கும், இந்து மதத்தின் கற்பனை யான இதிகாசங்கள், புராணங்களுக்கும் – தமிழை அழித்து வரும் சமஸ்கிருத மொழிக்கும் தம் முடைய கடுமையான கண்டனங்கள் மூலம் இந்த ஆசிரியர் கொடுத்த சாட்டை அடிகளைப் பார்ப்பனச் சாதியினராலும், மற்ற மேல்சாதிச் சூத்திரராலும் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.
எனவே, வைத்தியநாத அய்யர், பூவராகவாச்சாரியார், முத்துசாமி அய்யர், பி.வெங்கடாசலம்பிள்ளை முதலான உச்சிச் சாதியினர், திராவிடர் இனத்தைச் சேர்ந்த பண முதலைகளையே பயன்படுத்தி, இந்தத் திராவிடர் கழகக் கருஞ்சட்டை மாவீரரை எப்படியும் தீர்த்துக் கட்டியே ஆகவேண்டும் என்று திட்டமிட்டனர்.
இந்த இருதரப்பினரும் இணைந்து வகுத்த வஞ்சகத் திட்டப்படியே உடையார்பாளையம் ஆசிரியர் வேலாயுதம் 13.11.1947 அன்று வியாழன் காலை படுகொலை செய்யப் பட்டார்.
காலையில் வெளியே சென்ற குளித்து வருவதாகக் கூறிச் சென்றவர் சோளக் கொல்லையின் நடுவே பலா மரத்தின் கிளையினில் உயிரற்ற உடலாக தொங்கிக் கொண்டிருந்தார். பலிகொள்ளத் திட்டமிட்டவர்கள் அவர் கழுத்தை நெரித்துக் கொன்று தொங்க விட்டு விட்டனர்.
பார்ப்பனியம், பணமுதலாளித்துவம் ஆகிய இரண்டின் சூழ்ச்சியாலும் படுகொலை செய்யப்பட்ட உடையார்பாளை யம் வீரராம் இந்தக் கொள்கைப் போராளி – வாழ்ந்த போது மட்டும் அல்லாமல் மாண்ட பிறகும் திராவிட இயக்கத்துக்கு வலிமை சேர்க்கும் வழிகாட்டிப் பேராசானாக விளங்குகிறார்..
இரண்டு பெண் குழந்தைகட்குத் தாயான வேலாயுத னாரின் துணைவி செகதாம்பாள் அம்மையார் கண்களில் நீர்வீழ்ச்சியைப் பெருக்குவதுடன் மட்டும் நின்றுவிடவில்லை. ஓர் உண்மையான சுயமரியாதைப் பெண்ணாக வீறு கொண்டு வஞ்சினமுரைத்து, தம் துணைவர் என்னும் தக்காரின் நல்ல எச்சமாக இயக்கத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார்.
வாழ்க வீரர் வேலாயுதம்!