மனிதர்களைப் போலவே நடனமாடும் டெஸ்லா நிறுவனத்தின் ரோபோ தொழில்நுட்ப உலகின் புதிய விவாதம்

1 Min Read

சான் ஃபிரான்சிஸ்கோ: டெஸ்லா நிறுவனத்தின் மனித உருவ ரோபோவான ஆப்டிமஸ், தற்போது மனிதர்களைப் போலவே தத்ரூபமாக நடனமாடி அனைவரையும் திகைக்க வைத்துள்ளது. இந்தக் காணொலியை டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியும், தொழில்நுட்ப உலகின் முன்னணி முகமுமான எலோன் மஸ்க் தனது X தளத்தில் பகிர்ந்துள்ளார். இது இணையத்தில் வைரலாகப் பரவி, பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஆப்டிமஸின் fluid movements எனப்படும் தங்கு தடையற்ற அசைவுகளும், நடன அசைவுகளின் துல்லியமும் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்தக் காணொலி உண்மையானது தானா அல்லது செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டதா எனச் சிலர் கேள்வி எழுப்பி சமூக வலைத்தளங்களில் விவாதித்து வருகின்றனர். சிலர் இது போன்ற மனித இயந்திரங்கள் நமது எதிர்காலத்தை வடிவமைக்கும் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்தச் சூழலில், எலோன் மஸ்க் உருவாக்கியுள்ள Grok எனும் செயற்கை நுண்ணறிவுத் தளத்திடம் ஒருவர் ஆப்டிமஸின் திறனை மதிப்பிடுமாறு கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு Grok அளித்த பதில் சுவாரஸ்யமாக அமைந்துள்ளது.

ஆப்டிமஸ் இயந்திரம் சிறப்பாக நடனமாடியிருந்தாலும், நிஜ உலகில் அதன் தற்போதைய பயன்பாடு மிகவும் குறைவே என்று Grok தெரிவித்துள்ளது. மேலும், ஆப்டிமஸை விடச் சிறந்த மற்றும் அதிகப் பயன்பாடுடைய மனித இயந்திரங்கள் தற்போது உலகின் பிற பகுதிகளில் உருவாக்கப்பட்டு வருவதாகவும் Grok தனது பதிலில் குறிப்பிட்டுள்ளது.

டெஸ்லாவின் ஆப்டிமஸ் ரோபோவின் இந்த நடனக் காணொலி தொழில்நுட்ப உலகின் அடுத்த கட்ட வளர்ச்சியைப் பறைசாற்றுவதாக அமைந்துள்ள நிலையில், Grok-ன் யதார்த்தமான மதிப்பீடு இந்த விவாதத்திற்கு ஒரு புதிய பரிமாணத்தைச் சேர்த்துள்ளது. மனித உருவ ரோபோக்களின் எதிர்காலம் குறித்த எதிர்பார்ப்புகளையும், அவற்றின் நடைமுறைச் சவால்களையும் இது ஒரே சமயத்தில் உணர்த்துவதாக அமைந்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *