காரைக்குடி மே 23 கிராம மக்கள் எதிர்ப்பை அடுத்து கண்டதேவி கோயில் குறித்த நூலை வெளியிடாமல் ஆளுநர் புறப்பட்டுச் சென்றார். கண்டதேவி கோயில் மற்றும் தேர் குறித்த ஆங்கில மொழியாக்க நூலை வெளியிடாமல் ஆளுநர் சென்றார்.
ஆளுநர் வெளியிட இருந்த நூலுக்கு எதிராக சார் ஆட்சியர், காவல் துறையிடம் மக்கள் மனு அளித்தனர். காரைக்குடி தேவக்கோட்டை அருகே தனியார் மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஆளுநர் புத்தகத்தை வெளியிடுவதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.