சீரிய பெரியார் தொண்டரும், பெல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவரும், நெடுநாள் விடுதலை வாசகரும், திருச்சி பெல் திராவிடர் தொழிலாளர் கழகத்திலும், அண்ணாநகர் போலீஸ் காலனி பகுதி கழகத்திலும் இணைந்து பணியாற்றியவருமான கணேசன் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். தகவலறிந்த திராவிடர் கழக தோழர்கள், பொறுப்பாளர்கள் மறைந்த கணேசன் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அவரது இறுதி ஊர்வலம் நாளை (24.5.2025) காலை 11.00 மணிக்கு நடைபெறும்.