இனமானத் தமிழினத்தின் நலத் திற்கும் பாதுகாப்பிற்கும் உயர்வுக்கும் தன்னையே அர்ப்பணித்துப் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் விட்டுச் சென்ற சீரிய பணியைத் தொய்வின்றித் தொடர்ந்து நடத்தி வரும் பெரியாருக்குப் பெரியாராய் பேரும் புகழும் ஈட்டிக் கொண்டிருக்கும் தமிழினத் தலை வர்களில் பகுத்தறிவுத் தமிழராகத் திகழும் அய்யா கி.வீரமணி அவர்கள், நீதிமன்றங்களில் திருக்குறள் தேசிய நூலாக வைக்கப்பட வேண் டும் என அனைவருக்கும் முகாமையான வேண்டுகோளாக விடுத்திருப்பதை உலகத் தமிழர் முன்னேற்றத்திற்கு நெம்புகோலாகத் திகழும் லண்டன் த.மு.க. வழி மொழிந்து நெஞ்சார வரவேற்கின்றது.
திருக்குறள் நீதி நூல் நேர்மையில்லாச் செயலுக்கு நெற்றியடி கொடுத்து நீதியை (பக்கச் சார்பற்ற முறையில்) நிலை நிறுத்தும் ஒப்பற்ற அரிய நூல்.
உலகின் மூத்தகுடியான தமிழ்க்குடி, தமிழ் செம்மொழி என அறிவிக்க ஆதாரமாக இருப் பது திருக்குறளே. 2000 ஆண்டுகளுக்கு மேலான வாய்மைச் சிறப்பு மிக்க நூல் என உலகமாந்த இனமே நெஞ்சார ஏற்றுச் சிறப் படையும் சிறந்த நூல் என்பதை தமிழ்நாட்டின் அனைத்து மக்களும் சமய வேறுபாடு களின்றி தர்க்க வாதங்கள் செய்திடாது, பகுத்தறிவுச் சிந்தனையோடு முழு ஆதரவு நல்கி அறிவு நூலான திருக்குறளை நீதி மன்றங்களில் வைத்துப் போற்றிட வேண்டும் என மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றோம்.
தமிழர்களின் எண்ணம் ஈடேறிட வாழ்வு முன்னேறிட, வாய்மை வெல்லும் என்பதை நெஞ்சில் நிறுத்துவோம்!
– ம. தேவதாசு,
லண்டன் தமிழர் முன்னேற்றக் கழகம் (10.9.2004)