கோயிலில் விபூதி அடித்தபோது இளம்பெண் உயிரிழப்பு

Viduthalai
1 Min Read

மதுரையைச் சேர்ந்தவர்கள் கவுதம் பிரியா இணையர். 40 நாட்களுக்கு முன்பு இவர்களுக்கு குழந்தை பிறந்தது. ஆனால், குடும்பத் தகராறால் கவுதம் குழந்தையை தூக்கி வந்துள்ளார். பின்னர், குலதெய்வ கோயிலில் சமாதானம் பேசியுள்ளனர். அப்போது, கவுதமின் தம்பி கவுசிக் சாமியாடிக்கொண்டே பிரியாவுக்கு விபூதி அடித்துள்ளார். இதனால் நிலைகுலைந்த பிரியா அங்கேயே உயிரிழந்துள்ளார். இது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தி யுள்ளது.

 

தாஜ்மஹால்கூட கைவிட்டுப் போகும் : கபில்சிபில் எச்சரிக்கை

வக்ஃபு சட்டத்தால் தாஜ்மஹால் கூட கைவிட்டுப் போகும் என மூத்த வழக்குரைஞர் கபில்சிபில் வாதாடியுள்ளார். வக்ஃபு திருத்தச் சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது  உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான கபில் சிபில், இந்தச் சட்டம் பின்னோக்கிச் சென்று வக்ஃபு தன்மையை இழக்கச் செய்கிறது என்றார். இதனால், தாஜ்மஹாலும் கைவிட்டுப் போகலாம் என தெரிவித்தார்.

 

 எஸ்.பி.அய். வங்கியில் பணிகள்

பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள Circle Based Officers பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்களுக்கு தேவையான தகுதிகள், எப்படி விண்ணப் பிப்பது உள்ளிட்ட விவரங்களை இணைய தளத்தில் காணலாம்.

பேராசிரியர் மு.பி.பா. 86ஆவது பிறந்த நாளை முன்னிட்டு

பள்ளி மாணவர்களுக்கிடையே போட்டிகள்

பேராசிரியர் மு.பி.பாலசுப்பிரமணியம் 86ஆவது பிறந்த நாளை முன்னிட்டு செங்கல்பட்டு பேரின்பம் மழலையர் பள்ளி சார்பில் ” பள்ளி மாணவர்களுக்கிடையே”  நடைபெற்ற பேச்சுப் போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல், கட்டுரை, கையெழுத்து போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு   சிறப்பு விருந்தினர் மு.பி.பா மாணவர் ராஜேந்திரன்  மு.பி.பா பதக்கம் மற்றும் சான்றிதழ்களை  வழங்கினார். உடன் பள்ளியின் தாளாளர் மு.பி.பா.அன்புச் செழியன் மற்றும் முதல்வர் தா.சோபியா அன்புச்செழியன்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *