போரினால் பாதிக்கப்பட்ட பகுதிக்குள் கூடுதல் உதவிகள் செல்லாவிட்டால், அடுத்த 48 மணி நேரத்திற்குள் காஸாவில் 14 ஆயிரம் குழந்தைகள் இறக்க நேரிடும் என்று அய்க்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. இஸ்ரேலிய ராணுவத்தினரின் கட்டுப்பாடு களால் காஸாவில் இருக்கும் மக்களும், குழந்தைகளும் உதவியின்றி வாடுகின்றனர். குழந்தை களுக்கான உணவுகளை அயல் நாடுகள் வழங்கி வருகிறபோதும் அதை இஸ்ரேல் ராணுவத்தினர் அனுமதிப்பதில்லை.