அசாம் நீதிமன்றம் தீர்ப்பு
திப்ரூகர், மே 22- அசாமின் சரைதியோ மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவரை கடந்த 2012 ஆம் ஆண்டு ஒரு கும்பல் சித்ரவதை செய்து எரித்துக் கொன்றது. தங்களுக்கு எதிராக அவர் சூனியம் செய்வ தாக சந்தேகப்பட்டு இந்த கொடூரத்தை நிகழ்த்தியது.
இந்த பாதகச் செயலை செய்த 11 பெண்கள் உள்பட 23 பேர் கொண்ட அந்தக் கும்பலை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. 13 ஆண்டுகளாக நடந்த விசாரணை முடிந்து 19.5.2025 அன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.இதில் 23 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபாரதமும் விதித்து நீதிபதி அபுபக்கர் சித்திக்கு தீர்ப்பு அளித்தார். மேலும் கொல்லப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.8 லட்சம் இழப்பீடு வழங்கவும் குற்றவாளிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.