டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* காங்கிரசின் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் பிரிவு தலைவர் ரோகித் சவுத்ரி நேற்று அளித்த பேட்டியில், ‘‘ஆபரேஷன் சிந்தூர் முழுக்க முழுக்க ராணுவத்தின் வெற்றி நடவடிக்கை. அதே சமயம் பஹல்காம் விவகாரத்தில் மோடிக்கு அரசியல் தோல்வி கிடைத்துள்ளது. உளவுத்துறை, பாதுகாப்பில் தோல்வி அடைந்துள்ளனர். அதற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா தான் பொறுப்பேற்க வேண்டும். என்றார்.
* மோடி அரசாங்கம் ஆளுநர்களை தவறாகப் பயன்படுத்தி மாநிலக் குரல்களை நசுக்கி, தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை தடுக்கிறது. இது கூட்டாட்சியின் மீதான ஆபத்தான தாக்குதல், இதை எதிர்க்க வேண்டும் என ராகுல் எக்ஸ் தளத்தில் பதிவு. மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த விவகாரம் தொடர்பாக 8 மாநில முதலமைச்சர்களுக்கு எழுதிய கடிதம் தொடர்பான பதிவையும் ராகுல் காந்தி, தனது எக்ஸ் வலைதள பதிவில் பகிர்ந்துள்ளார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ஒடிசாவில், தொழில்முறை படிப்புகளில் 27 சதவீதம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வேண்டும், பிஜேடி மற்றும் காங்கிரஸ் கோரிக்கை. 27 சதவீத இடஒதுக்கீடு கோரி ஒடிசா முதலமைச்சர் மோகன் மஜ்ஹியின் இல்லத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்த காங்கிரசும் திட்டம்.
* கடின கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டியதால் கவனத்தை திசை திருப்ப உலக நாடுகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை பிரதமர் மோடி அனுப்புகிறார்’ என காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* பல்கலைக்கழக துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்கும் சட்டப் பிரிவுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. அரசு பதில் அளிக்க அவகாசம் தராமல் விசாரணை நடத்துவது முறையற்ற செயல், நியாயமானது இல்லை என தமிழ்நாடு அரசுத் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் அமர்வு உத்தரவிட்டுள்ளது.
* ஒன்றிய அரசு தர வேண்டிய ரூ.2291 கோடி கல்வி நிதியை விடுவிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு: மும்மொழிக் கொள் கையை ஏற்றால்தான் பணம் தரப்படும் என்பது சட்டவிரோதம் என குற்றச்சாட்டு.
.- குடந்தை கருணா