கழகப் பொதுச் செயலாளர் பங்கேற்பு
சிதம்பரம், ஜூன் 27- சிதம்பரம் மாவட்ட கழக இணைச் செயலா ளரும், கழக சொற்பொழிவாளரு மான புவனகிரி யாழ்.திலீபன் தந்தை, சுயமரியாதைச் சுடரொளி அ.சின்னக்கண்ணு படத்திறப்பு நிகழ்ச்சி 16.6.2023 வெள்ளிக்கிழமை காலை 11.00 மணிக்கு – புவனகிரி கன்னிகா பரமேஸ்வரி திருமண மண்டபத்தில், கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திர சேகரன் தலைமையில் நடைபெற்றது.
திராவிடர் கழக பொதுச் செய லாளர் வீ.அன்புராஜ் படத்தினை திறந்து வைத்து நினைவேந்தல் உரையாற்றினார்.
மாவட்டத் தலைவர் பேராசிரி யர் பூ.சி.இளங்கோவன், மாவட்ட செயலாளர் அன்பு.சித்தார்த்தன், மாவட்ட துணைத் தலைவர் கோவி.பெரியார்தாசன், மாநில இளைஞரணித் தலைவர் த.சீ.இளந் திரையன், தி.மு.க. தலைமை கழகப் பேச்சாளர் கோ.வீரமணி, புவனகிரி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலர் ஏ.எஸ்.மதியழகன், தமிழக வாழ்வுரி மைக் கட்சி தலைமை குழு உறுப் பினர் மு.பாலகுருசாமி, மயிலாடு துறை மாவட்ட தலைவர் கட வாசல் குணசேகரன், காங்கிரஸ் கட்சி சொற்பொழிவாளர் மோகன் தாஸ், தி.மு.க. மேனாள் சட்டமன்ற உறுப்பினரும், மாநில பொறியாளர் அணி மாநில செயலாளருமான துரை.கி.சரவணன், வடலூர் நகர தலைவர் புலவர் இராவணன் ஆகியோர் இரங்கலுரையாற்றினர்.
நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட கழகத் தலைவர் சொ.தண்டபாணி, கடலூர் மாவட்ட அமைப்பாளர் மணிவேல், மாவட்ட செயலர் எழிலேந்தி, சிதம்பரம் மாவட்ட அமைப்பாளர் கு.தென்னவன், பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலர் துரை.செயபால், திருமுட்டம் ஒன்றிய தலைவர் கு.பெரியண்ண சாமி, ஒன்றிய செயலர் ப.முருகன், ஆண்டிபாளையம் குணசேகரன், ஆண்டிபாளையம் பஞ்சநாதன், காட்டுமன்னார்குடி நகர தலைவர் பொன்.பஞ்சநாதன், சிதம்பரம் நகர அமைப்பாளர் இரா.செல்வ ரத்தினம், மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் தெ.ஆறுமுகம், தொழிலாளர் அணி செயலர் அ.சுரேஷ், விருத்தாசலம் மாவட்ட தலைவர் அ.இளங்கோவன், மாவட்ட செயலாளர் வெற்றிசெல்வன், மாவட்ட மகளிர் பாசறை யாழ்.சுபா ஆகியோர் கலந்துகொண்டனர்.
இறுதியாக, விடுதலை சிறுத் தைகள் கட்சி நகர அமைப்பாளர் யாழ்.செங்குட்டுவன் நன்றி கூறினார்.