தஞ்சை, மே 21– வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் பேராசிரியருக்கு இந்திய தொழில்நுட்ப கல்விக் கழக “சிறந்த ஆசிரியர் விருது” (ISTE Best Teacher Award 2024) வழங்கப்பட்டது.
09.05.2025 அன்று நடைபெற்ற இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகத்தின் 27ஆவது ஆண்டுக்கான பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் ஆசிரியர்கள் மாநாட்டில் (தமிழ்நாடு பிரிவு), இக்கல்லூரியின் மாடர்ன் ஆபீஸ் பிராக்டீஸ் துறையைச் சார்ந்த விரிவுரையாளர்
ஆர்.லலிதாவுக்கு “சிறந்த ஆசிரியர் விருதை” கும்மிடிபூண்டி, திருவள்ளூர் மாவட்டம்,
ஆர்.எம்.கே. பொறியியல் கல்லூரியின் நிறுவனத் தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம் (மேனாள் சட்டமன்ற உறுப்பினர்) வழங்கினார். இந்நிகழ்வில் தமிழ்நாடு இந்திய தொழில்நுட்பக் கல்வி கழகத் தலைவர் டாக்டர் ஏ.சங்கரசுப்ரமணியன் மற்றும் TN ISTE செயலாளர் மற்றும் பொருளாளர் பேராசிரியர் கே.சவுரிராஜன் மற்றும் சு.ஆ.மு.பொறியியல் கல்லூரியின் முதல்வர் கலந்து கொண்டனர்.
மேலும் விருதினை பெற்ற பேராசிரியை அவர்களை இக்கல்லூரியின் முதல்வர், துணைமுதல்வர் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினார்கள்.