கவனத்திற்குரிய
முக்கிய செய்திகள்
27.6.2023
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* மத ரீதியாக மக்களை பிளவுபடுத்துவது கேடானது, சரத்பவார் பேட்டி – எதிர்க்கட்சிகளின் மாபெரும் கூட்டணி அமையும், மம்தா நம்பிக்கை.
* மணிப்பூர் வன்முறையை, மோடி அரசு புறந்தள்ள முடியாது, தலையங்க செய்தி.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* கருநாடகா தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தெலங்கானாவில் பாரதிய ஜனதா கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது. தலைவர் சஞ்சய் பண்டியை நீக்க கோரிக்கை.
* கோவில் அர்ச்சகர் நியமனத்தில் ஜாதிக்கு பங்கு இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* கழிப்பறைகளை வெறும் கைகளால் சுத்தம் செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளதாக ரயில்வே ஊழியர்கள் பேட்டி. தேசிய சபாய் கரம்சாரி ஆணையம் விசாரிக்க முடிவு.
* கோயில்களைத் தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற பாஜகவின் கோரிக்கை கோயில்களை யும் அதனுடன் தொடர்புடைய சொத்துகளையும் அழிக் கும் என அமைச்சர் பி.கே.சேகர் பாபு பேச்சு.
தி இந்து:
* கியான்வாபி மசூதி வழக்கு முதல் அவுரங்கசீப்பின் புதுப்பிக்கப்பட்ட அரக்கத்தனம் வரை – வரலாற்றில் புத்துயிர் பெற்ற போட்டிகள் – ஹிந்துத்துவா மதம் மற்றும் கலாச்சாரம் பற்றிய அதன் கருத்துகளை தேசம் மற்றும் மாநிலத்துடன் இணைக்கிறது என்பதை உறுதிப்படுத்து கிறது என்கிறார் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர்
டைம்ஸ் ஆப் இந்தியா:
* ஆளுநரால் அமைச்சரை ‘டிஸ்மிஸ்’ செய்ய முடியுமா என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது
* அய்சிஅய்சிஅய் வங்கியின் மேனாள் தலைமைச் செயல் அதிகாரி கோச்சார் ரூ.64 கோடி சட்டவிரோதமாக பெற்றுள்ளார் என சி.பி.அய். சார்பில் மனு.
– குடந்தை கருணா