ராணிப்பேட்டை, மே 21- கோவில் விழாக் குழுவினரை துப்பாக்கிக் காட்டி மிரட்டிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவை அடுத்த தென் கடப்பந்தாங்கல் கிராமத்தில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில் துரியோதனன் படு களம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு 18.5.2025 அன்று அதிகாலை 2 மணியளவில் ‘சாமி ஊர்வலம்’ நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து அம்மன் வீதி உலா நடைபெற்றது. அப்போது ரோட்டு தெருவில் வசித்து வரும் விஜயா என்ற மூதாட்டியின் வீட்டின் முன்பு சாமியை நிறுத்தாமல் விழாக் குழுவினர் சென் றதாக தெரிகிறது. இதனால் விழாக்குழுவினருடன், விஜயா வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது விஜயாவின் வீட்டுக்கு வந்திருந்த சென்னை திருவான்மியூர் பகுதியைச் சேர்ந்த விஜயாவின் பேரன் புவ னேஸ்வரன் (வயது 20) என்பவர் திடீரென பாட்டியின் வீட்டில் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து வந்து விழாக்குழுவினரை மிரட்டியதாக கூறப்படுகிறது.
அவரை ஊர் மக்கள் சமாதா னப்படுத்தியுள்ளனர். பின்னர் இது தொடர்பாக விழாக்குழுவினர் வாலாஜாப்பேட்டை காவல் நிலை யத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை யினர் விசாரணை நடத்தினர்.
வழக்குப்பதிவு
விசாரணையில், தனியார் துறையில் வேலை பார்த்து வரும் புவனேஸ்வரன் தடை செய்யப்பட்ட இணைய பக்கத்தின் மூலமாக, ரூ.7,000 கொடுத்து துப்பாக்கி (ஏர்-கன்) வாங்கியது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவரிடமிருந்து துப்பாக்கியை பறிமுதல் செய்த காவல்துறையினர் அவர் மீது 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.