வாட்ஸ் அப்பில் புதிய மோசடி! எச்சரிக்கை!
சைபர் குற்றவாளிகள் வாட்ஸ்அப்பில் போட்டோக்களை அனுப்பி ஸ்டீகனோகிராபி என்ற புதிய மோசடியை அரங்கேற்றி வருகின்றனர். போட்டோ பதிவிறக்கம் செய்யப்பட்டவுடன், வங்கி கணக்குகளில் உள்ள பணம் முழுவதையும் திருடிவிடுகின்றனர். இதனால் புதிய எண்களில் இருந்து வரும் போட்டோக்களை பதிவிறக்கம் செய்வதை தவிர்க்க வேண்டும். முக்கியமாக செட்டிங்சில் ‘ஆட்டோ டவுன்லோட்’ வசதியை ஆஃப் செய்ய வேண்டும்.
இந்தியாவில் கரோனா பரவல்
ஒன்றிய அரசு விளக்கம்
இந்தியாவில் கரோனா பரவல் கட்டுக்குள் இருப்பதாக ஒன்றிய சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, நாடு முழுவதும் 257 பேர் மட்டுமே கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் ஒன்றிய சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது. கரோனா தொற்று பாதித்த 2 பேர் அண்மையில் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உணவு நெருக்கடியில்
பாக். மக்கள்
பாக். மக்கள்
1.10 கோடி பாக். மக்கள் உணவு பற்றாக்குறையை எதிர்கொள்வதாக அய்நாவின் ஆய்வில் தெரியவந்துள்ளது. இது, அந்நாட்டு மக்கள்தொகையில் 22% ஆகும். குறிப்பாக, பலூசிஸ்தான், சிந்த், கைபர் பதுன்கவா உள்பட 68 கிராமப்புறங்களில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் காலநிலை மாற்றங்களால் இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மேலும், சமீபத்திய போரின் போதும் பாக்.,னின் சில பகுதிகளில் உணவுப் பஞ்சம் நிலவியதாக செய்திகள் வெளியாகின.
புதிய சர்ச்சையில் சிக்கிய நித்தியானந்தா (VIDEO)
சாமியார் நித்தியானந்தா மற்றொரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். இந்து தேசமாக இருந்த இந்தியாவில் இருந்த சொத்துகளை கிறிஸ்தவர்களான பிரிட்டிஷ்காரர்கள் சுரண்டிச் சென்றதாக அவர் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், எல்லா பிரச்சினைக்கும் ஸநாதன இந்து தர்மமே காரணம் என அவர்கள் மூளைச்சலவை செய்ததாகவும் நித்தியானந்தா குறிப்பிட்டுள்ளார். இது மத மோதலை ஏற்படுத்தும் தொனியில் இருப்பதாக பலரும் பதிவிட்டு செய்து வருகின்றனர்.