சென்னை காவல்துறை ஆணையர் அருண் இன்று விடுத்த உத்தரவில் பின்வரும் 5 விதி மீறல் களுக்கு மட்டுமே சாலையில் அபராதம் விதிக்கப் படும் என்று அறிவித்தார்.
- அதி வேகமாக வாகனம் ஓட்டுதல்
- தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் பயணித்தல்
- தடுக்கப்பட்ட வழியில் (No Entry) பயணித்தல்
- மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுதல்
- இருவருக்கு மேல் இரு சக்கர வாகனத்தில் பயணித்தல்.
சென்னையில் மட்டும் நாளொன்றுக்கு 2000 முதல் 3000 வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.
பொது மக்களும் வீதி முறைகளைச் சரியாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், இரு முறைக்கு மேல் தொடர்ந்து தவறிழைப்போர் மேல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.